பட்டினியை போக்கிவிட்டு தேர்தலுக்குச் செல்வோம் !!
43 கோடி ரூபாய் பெறுமதியான மருந்துகள், மருத்துவ உபகரணங்களை நாளை (22) சுகாதார அமைச்சரிடம் கையளிக்க உள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் தெரிவித்தார்.
நாட்டு மக்களின் பட்டினியை தீர்த்துவிட்டு தேர்தலுக்குச் செல்ல வேண்டுமெனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
சேவல், யானை, தொலைபேசி என எல்லா சின்னங்களிலும் தேர்தலில் போட்டியிட்டு நான் வெற்றிபெற்றிருக்கிறேன். எனவே எனக்கு தேர்தல் என்பது ஒரு பிரச்சினையல்ல. ஆனால் நாட்டின் தற்போதைய சூழ்நிலையில் மக்கள் பட்டினியில் இருக்கிறார்கள். முதலில் பட்டினியை போக்கிவிட்டு பிறகு தேர்தலுக்குச் செல்வோம் எனவும் தெரிவித்தார்.