வங்காள விரிகுடாவில் காற்றழுத்த தாழ்வு நிலை!!
திருகோணமலைக்கு வடகிழக்கே 370 கிலோமீற்றர் தொலைவில் அமைந்துள்ள தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்பில் நிலவும் காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக இன்று (23) மழை அதிகரிக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
எதிர்வரும் 48 மணித்தியாலங்களில் காற்றின் நிலை மாறும் எனவும் அது இலங்கையை கடக்கும் சாத்தியம் இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக எதிர்வரும் டிசம்பர் மாதம் 24 மற்றும் 25 ஆம் திகதிகளில் தீவின் பல பகுதிகளில் மழை மற்றும் காற்றின் அதிகரிப்பு எதிர்பார்க்கப்படுகின்றது.
வடக்கு, கிழக்கு, ஊவா மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும் அதேவேளை ஏனைய பிரதேசங்களில் மாலை அல்லது இரவு நேரங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.