உணவுப் பொருட்களின் விலை குறைப்பு!!
லங்கா சதொச நிறுவனம் ஏழு உணவுப் பொருட்களின் விலைகளைக் குறைத்துள்ளது.
எதிர்வரும் நத்தார் பண்டிகையை முன்னிட்டு இன்று முதல் அமுலுக்கு வரும் வகையில் இவ்வாறு ஏழு அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளது.
அதனடிப்படையில்,
• பெரிய வெங்காயம் – ஒரு கிலோவுக்கு 185.00 ரூபா (5.00 ரூபா குறைக்கப்பட்டது)
• பருப்பு – ஒரு கிலோவுக்கு 374.00 ரூபா (11.00 ரூபா குறைக்கப்பட்டது)
• டின் மீன் (உள்நாட்டு) – 425 கிராம் ஒன்றுக்கு 475.00 ரூபா (15.00 ரூபா குறைக்கப்பட்டது)
• மிளகாய் – ஒரு கிலோவுக்கு 1,780.00 ரூபா (15.00 ரூபா குறைக்கப்பட்டது)
• நெத்தலி – ஒரு கிலோவுக்கு 1,100.00 ரூபா (50.00 ரூபா குறைக்கப்பட்டது)
• வெள்ளை சர்க்கரை – ஒரு கிலோவுக்கு 218.00 ரூபா (6.00 ரூபா குறைக்கப்பட்டது)
• உருளைக்கிழங்கு – ஒரு கிலோவுக்கு 285.00 ரூபா (5.00 ரூபா குறைக்கப்பட்டது)