முட்டையும் இல்லை; கேக்கும் இல்லை!!
சந்தையில் முட்டை தட்டுப்பாடு மற்றும் முட்டை விலை உயர்வு காரணமாக இந்த பண்டிகை காலத்தில் ஒரு கிலோ கேக் விலை 1,500 ரூபாயாக உயர்ந்துள்ளது என அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் என்.கே. ஜயவர்தன கூறுகிறார்.
ஒரு மாதத்திற்கு முன்னர் 1,100 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு கிலோ கேக்கின் விலை தற்போது 1,500 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதனால், பண்டிகைக் காலங்களிலும் கேக்கின் தேவை 25 வீதமாக குறைந்துள்ளதாக அவர் தெரிவித்தார்.
முட்டைகளுக்கு கடும் தட்டுப்பாடு நிலவுவதால் பண்டிகைக் காலங்களில் கேக் தேவையை பூர்த்தி செய்ய முடியாது என்று கூறிய ஜெயவர்தன, ஒரு சில பெரிய அளவிலான பேக்கரிகளைத் தவிர, சிறிய அளவிலான பேக்கரிகளில் கேக் வகைகள் இல்லை என்றும் கூறினார்.
பண்டிகைக் காலங்களில் முட்டை தட்டுப்பாடு ஏற்படாது என முட்டை உற்பத்தியாளர்கள் கூறினாலும், குறிப்பாக பண்டிகைக் காலங்களில் தேவைக்கு ஏற்ற முட்டைகளை விநியோகிக்க முடியவில்லை என்றும் ஜயவர்தன தெரிவித்தார்.