அறிக்கை சமர்ப்பிக்குமாறு ஜனாதிபதிக்கு கடிதம்!!
கடந்த மார்ச் 31ஆம் திகதி முதல் நாட்டில் முன்னெடுக்கப்பட்ட போராட்டம் காரணமாக ஏற்பட்ட வன்முறை சம்பவங்கள் தொடர்பான ஜனாதிபதி விசாரணை குழுவின் அறிக்கையை பாராளுமன்றில் முன்வைக்குமாறு கோரி 107 பாராளுமன்ற உறுப்பினர்களின் கையெழுத்துடனான கடிதம் ஒன்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு அனுப்பப்பட்டுள்ளது.
அமைச்சர்கள், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் நாடாளுமன்றில் சுயாதீனமாக செயற்படுவதாக அறிவித்து உதய கம்மன்பில உள்ளிட்டோர் அடங்குகின்றனர்.
கடந்த காலங்களில் முன்னெடுக்கப்பட்ட போராட்டங்களின் போது இடம்பெற்ற வன்முறை சம்பவங்களில் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் உட்பட சிலர் கொலை செய்யப்பட்டதோடு பாராளுமன்ற உறுப்பினர்களின் வீடுகள் மற்றும் சொத்துகள் என்பன சேதமாக்கப்பட்டதாக அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.