;
Athirady Tamil News

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மழை!!

0

தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை, கிழக்குக் கடற்கரை வழியாக நுழைந்து தீவின் குறுக்காக பயணிகின்றது.

இதன் காரணமாக, நாட்டின் பல பகுதிகளில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

கிழக்கு, ஊவா, மத்திய, சப்ரகமுவ, மேல், தெற்கு மற்றும் வடமேற்கு மாகாணங்களிலும் பொலன்னறுவை மாவட்டத்திலும் சில இடங்களில் 150 மில்லி மீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும்.

ஏனைய மாகாணங்களில் சில இடங்களில் 75 மில்லி மீற்றருக்கு மேல் பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.