;
Athirady Tamil News

காலநிலை பாதிப்பில் இருந்து மக்களை பாதுகாக்க வழங்கப்பட்ட விசேட தொலைபேசி இலக்கம்!!

0

தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பகுதியில் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக நாட்டின் பல பகுதிகளிலும் கடும் மழை பெய்து வருகிறது.

தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பகுதியில் ஏற்பட்டுள்ள தாழமுக்கம் காரணமாக எதிர்வரும் காலநிலை நிலவரம் குறித்து வளிமண்டலவியல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் அதுல கருணாநாயக்க நாட்டுமக்களுக்கு சில அறிவித்தலை விடுத்துள்ளார்.

கடும் மழை காரணமாக, ஏதேனும் ஒரு பிரதேசத்திலோ அல்லது இடத்திலோ மண்சரிவு ஏற்படுவதற்கான ஆரம்ப அறிகுறிகள் தென்பட்டால், அது தொடர்பில் அனர்த்த முகாமைத்துவ நிலையத்திற்கு அறிவிக்குமாறு கோரப்பட்டுள்ளது.

117 என்ற விசேட தொலைபேசி எண்ணிற்கு தொடர்புகொண்டு ஏதேனும் பேரிடர் ஏற்படும் சூழ்நிலை மற்றும் துயரங்கள் குறித்த தகவல்களை தெரிவிக்கமுடியும் என்று தெரிவித்துள்ளது.

கிழக்கு கடற்பரப்பில் இருந்து நாட்டிற்குள் நுழைந்து இலங்கை ஊடாக கடக்கும் காற்றழுத்த தாழ்வு காரணமாக தற்போது பல பகுதிகளில் கடும் மழையும் காற்றும் நிலவுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதன்படி, மீனவ மற்றும் கப்பல் போக்குவரத்து சமூகம் மறு அறிவித்தல் வரை தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்ப்பரப்பில் பயணிக்க வேண்டாம் என வளிமண்டலவியல் திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.

இதேவேளை, அத்துடன் மலையகப் பகுதிகளில் உள்ள வீதிகளில் வாகனங்களை செலுத்தும் சாரதிகளும் அவதானத்துடன் செயற்படுமாறு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் கோரியுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.