மண்ணுக்குள் உயிரை விட்ட ஆயேஷா மற்றும் சித்தும்!!
கண்டி, துனுவில கணபதிவத்த பிரதேசத்தில் இன்று (25) காலை பெய்த கடும் மழையின் போது வீடொன்றின் மீது மண் மேடு சரிந்து விழுந்ததில் இரண்டு சிறுவர்கள் உயிரிழந்துள்ளனர்.
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 18 வயதுடைய ஆயேஷா நிஷானி விதாரண மற்றும் 16 வயதுடைய சித்தும் சாரங்க விதாரண ஆகிய இரு பிள்ளைகளே உயிரிழந்துள்ளனர்.
விபத்தின் போது வீட்டில் தாய், தந்தை மற்றும் மூன்று பிள்ளைகள் இருந்துள்ளனர்.
காயமடைந்த தாய், தந்தை மற்றும் 12 வயது சிறுமியை வைத்தியசாலையில் அனுமதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இராணுவம், பொலிஸார் மற்றும் பிரதேசவாசிகளின் கூட்டு முயற்சியின் பின்னர் மண்ணில் சிக்கிய சிறுவர்கள் வீட்டின் இடிபாடுகளுக்கு இடையில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டன.
மீட்கப்படும் போதே சிறுவர்கள் இருவரும் உயிரிழந்த நிலையில் காணப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.