யாழில் நான்கு வகையான பயிர் செய்கைகள் பூச்சிய நிலையில்!!
யாழ்ப்பாணத்தில் வழமையாக மேற்கொள்ளப்படும் பயிர் செய்கையில் நான்கு விதமான பயிர் செய்கை பூச்சிய உற்பத்தியாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளதாக யாழ்.மாவட்ட விவசாய பணிப்பாளர் கைலேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
மேலும் தெரிவிக்கையில்,
சிறிய தினை , பெரிய வெங்காயம் , உருளைக்கிழங்கு மற்றும் இஞ்சி ஆகிய ஆகிய நான்கு பயிர் செய்கைகளை விவசாயிகள் கைவிட்டமையால் , அவை பூச்சிய நிலையை அடைந்துள்ளது.
குறிப்பாக சங்கானை பிரதேச செயலக பிரிவில் , அராலி பகுதியில் பெரிய வெங்காய பயிர் செய்கையும், கோப்பாய் , உடுவில் பிரதேச செயலக பிரிவில் , உருளைக்கிழங்கு பயிர் செய்கையும் மற்றும் தினை , இஞ்சி ஆகிய பயிர் செய்கையும் அதிகளவில் இடம்பெற்று வந்த நிலையில் கால நிலை மாற்றம் காரணமாக விவசாயிகள் செய்கைகளை கைவிட்டு உள்ளமையால் , அவை பூச்சிய நிலையை அடைந்துள்ளது என தெரிவித்தார்.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”