58 மாணவர்களை சுனாமியில் இழந்த மாளிகைக்காடு அல்- ஹுசைன் வித்தியாலயத்தின் சுனாமி நினைவு தின நிகழ்வும், துஆ பிராத்தனையும் !
சுனாமிப்பேரலையில் 58 மாணவர்களை இழந்த கல்முனை கல்வி வலய மாளிகைக்காடு கமு/கமு/ அல்- ஹுசைன் வித்தியாலயத்தின் சுனாமி நினைவு தின நிகழ்வும், துஆ பிராத்தனையும் பாடசலை அதிபர் ஏ.எல்.எம்.ஏ. நழீர் தலைமையில் பாடசலையில் இன்று (26) இடம்பெற்றது.
இந்நிகழ்வில் அல்- மீஸான் பௌண்டஷன் ஸ்ரீலங்கா தவிசாளரும், மாளிகைக்காடு கமு/கமு/ அல்- ஹுசைன் வித்தியாலய பழைய மாணவர் சங்க செயலாளருமான யூ.எல்.என். ஹுதா உமர் பிரதம பேச்சாளாராக கலந்துகொண்டு மாளிகைக்காடு கமு/கமு/ அல்- ஹுசைன் வித்தியாலய 58 மாணவர்களின் இழப்பு, சுனாமி இலங்கைக்கு ஏற்படுத்திய வடுக்கள், சுனாமிக்கு பின்னர் அப்பாடசாலையின் மீள் உருவாக்கம், பாடசாலை மாணவர்களின் கல்வி நிலைகள், சமகாலத்தில் மாணவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள், ஆசிரியர்களுக்கு வழங்க வேண்டிய கௌரவங்கள், மாளிகைக்காடு கமு/கமு/ அல்- ஹுசைன் வித்தியாலய உருவாக்கத்தில் பாடுபட்டோர்கள் தொடர்பில் உரை நிகழ்த்தினார்.
இந்நிகழ்வில் பாடசாலை பிரதியதிபர் ஏ.எம். நளீம், பாடசாலை ஆசிரியர்கள், மாணவர்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.