தகுதித்தேர்வு எழுதாமல் மருத்துவப்பணி: வெளிநாடுகளில் படித்த 73 டாக்டர்கள் மீது வழக்கு..!!
வெளிநாடுகளில் எம்.பி.பி.எஸ். படிக்கும் மருத்துவ மாணவர்கள், இந்தியாவில் மருத்துவ பணியை மேற்கொள்வதற்கு தகுதித்தேர்வு ஒன்றை எழுத வேண்டியது கட்டாயம் ஆகும். ஆனால் ரஷியா, சீனா, உக்ரைன், நைஜீரியா போன்ற வெளிநாடுகளில் கடந்த 2011-22-ம் ஆண்டுகளுக்கு இடையே மருத்துவம் பயின்று இந்தியாவில் மருத்துவப்பணி செய்யும் 73 பேர் மேற்படி தகுதித்தேர்வு எழுதவில்லை என தெரியவந்தது. இதைத்தொடர்ந்து இந்த மாணவர்களுக்கு எதிராக சி.பி.ஐ. சார்பில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது. அத்துடன் இவர்களுக்கு மருத்துவ பணி செய்ய சட்ட விரோதமாக அனுமதி வழங்கிய 14 மாநில மருத்துவ கவுன்சில்கள் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது. இந்த வழக்கில் அதிகாரிகள் விசாரணையை தொடங்கி விட்டதாக சி.பி.ஐ. வட்டாரங்கள் நேற்று தெரிவித்தன.