“முன்மாதிரி மிக்க மாணவர்கள்” எனும் மாணவர்களுக்கான விஷேட விழிப்புணர்வு நிகழ்ச்சி !
சிறுவர் நன்னடத்தை மற்றும் பாதுகாப்பு திணைக்களமானது, தேசிய ரீதியில் பாடசாலை மாணவர்களுக்கான “முன்மாதிரி மிக்க மாணவர்கள்” எனும் கருப்பொருளின்கீழ் விழிப்புணர்வு செயலமர்வுகளை நடாத்தி வருகின்றது. அதன் தொடர்ச்சியாக இறக்காமம் பிரதேச செயலகத்திற்கான விழிப்புணர்வு செயலமர்வானது, சது/அமீரலிபுரம் வித்தியாலயத்தில் செவ்வாய்க் கிழமை பாடசாலை முதல்வர் எம்.எஸ். லாஹிர் தலைமையில் இடம்பெற்றது.
சிறுவர் உரிமைகள் மேம்பாட்டு உத்தியோகத்தர் ஆர்.எஸ். ஸபறுல் ஹஸீனாவின் ஒருங்கிணைப்பில் இடம்பெற்ற இந்த விழிப்புணர்வு செயலமர்விற்கு வளவாளராக உளவளத்துணை உத்தியோகத்தர் ஏ.எச். றகீப் கலந்துகொண்டு “முன்மாதிரி மிக்க மாணவர்கள்” எனும் கருப்பொருளின் கீழ் விழிப்புணர்வு செயலமர்வை நடாத்தினார். மேலும் இந்நிகழ்வில், பொறுப்பாசிரியர் ஏ.சல்மான், உளவளத்துணை ஆசிரியை உட்பட பெண்கள் அபிவிருத்தி வெளிக்கள உத்தியோகத்தர் எஸ். றிஸ்மியா ஜஹான் ஆகியோரும் கலந்து கொண்டனர்.