விலகுவதற்கு எந்நேரமும் தயார்!!
அரசாங்கத்திலிருந்து விலகுவதற்கு எந்நேரமும் தயாராக இருப்பதாக ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் விமலவீர திஸாநாயக்க தெரிவித்தார்.
எங்களால் அமைக்கப்பட்ட அரசாங்கம் என்றாலும் மக்களை நெருக்கடிக்கு தள்ளும் அரசாங்கத்தின் தீர்மானங்களை எதிர்ப்பதற்கு தமக்கு அதிகாரம் இருப்பதாகவும், அந்த அதிகாரத்தைப் பயன்படுத்த பின்நிற்கப்போவதில்லை எனவும் தெரிவித்தார்.