இரு அமைச்சுகளுக்கு புதிய செயலாளர்கள் நியமனம்!!
இரண்டு அமைச்சுகளுக்கான செயலாளர்களை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நியமித்துள்ளார்.
இதன்படி, பொது நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி நிறுவனங்கள் அமைச்சின் செயலாளராக H.K.D.W.M.N.B ஹபுஹின்ன நியமிக்கப்பட்டுள்ளார்.
மேலும் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சின் செயலாளராக M.M.P.K மாயாதுன்ன நியமிக்கப்பட்டுள்ளார்.