மின்சார கட்டணம் சுமார் 60% முதல் 65% வரை அதிகரிக்கும்!!
இலங்கை மின்சார சபையின் கூற்றுப்படி, மின்சார கட்டணம் சுமார் 60% முதல் 65% வரை அதிகரிக்கும் என அதன் பொது முகாமையாளர் ரொஹான் செனவிரத்ன இன்று (27) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்தார்.
“சுமார் 60% – 65% வரும். அதை எங்கள் அமைச்சகத்தின் ஊடாகத் தான் செய்கிறது.”
ஒரு யுனிட் மின்சாரத்திற்கு விதிக்கப்படும் குறைந்தபட்ச கட்டணம் என்ன? என்று ஒரு பத்திரிகையாளர் கேள்வி எழுப்பினார்
“குறைந்தது ஒவ்வொரு முறையிலும் உள்ளது.. ஒவ்வொரு அலகுக்கும் வித்தியாசம் உள்ளது. 48 மற்றும் 42 தோராயமாக வரும். தற்போது 29 மற்றும் 14 உள்ளன. பின்னர் நாங்கள் 48 மற்றும் 42 ஐ எதிர்பார்க்கிறோம்.”
வழிபாட்டுத் தலங்களுக்கான மின்சாரக் கட்டணங்கள் சற்று அதிகரிக்கப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டிருந்தார்.
எவ்வாறாயினும், இந்த விடயம் தொடர்பில் இன்னும் கலந்துரையாடப்பட்டு வருவதாக பொது முகாமையாளர் மேலும் தெரிவித்தார்.