;
Athirady Tamil News

என்னுடன் பழகிய பல அற்புதமான தலைவர்களை கொலை செய்தவர்களை எவ்வாறு ஏற்கமுடியும் – அமைச்சர் டக்ளஸ் கேள்வி!!

0

என்னுடன் பழகிய பல அற்புதமான நெருக்கமான தலைவர்கள் பத்திரிகையாளர்கள் மனித உரிமை செயற்பாட்டாளர்கள் போராளிகளை கொலை செய்தவர்களை – அவர்களுக்கு தலைமை வகித்தவர்களை எவ்வாறு ஏற்கமுடியும் என கேள்வியெழுப்பிய ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகமும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா யாழ் மாநகரசபையின் பாதீட்டு விவகாரத்தை வைத்து அரசியல் செய்யும் நோக்கம் எமக்கு இல்லை எனவும் அதே சமயம் எமது தோளில் ஏறி ஹையா ஹையா என ஆட்டவும் விட முடியாது என்றார்.

இன்று புதன்கிழமை யாழ்ப்பாணத்திலுள்ள ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் தலைமை அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது
மாவீரர் தினம் மற்றும் திலீபனின் நினைவேந்தல் போன்றவற்றை மணிவண்ணன் தரப்பு மேற்கொண்டதாலா யாழ் மாநகர சபையின் பாதீட்டுக்கு ஆதரவளிக்கவில்லை என கேள்வியெழுப்பிய போது,

அவ்வாறு கூற முடியாது. இது கட்சியின் கொள்கை. அவர்கள் வேண்டுமானால் தங்கள் சுயலாபத்திற்கு அவ்வாறு கூற முடியும் என்றார்.

இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில், ஈழமக்கள் ஜனநாயக கட்சி தமிழ் மக்களின் அபிவிருத்தி, அரசியல் மற்றும் அன்றாடப் பிரச்சினைகள் தொடர்பில் தொடர்ந்து பயணித்துவரும் கட்சியாகும்.

அந்த வகையில் யாழ்.மாநகரசபையின் பாதீட்டை வைத்து அரசியல் செய்யவேண்டிய நோக்கம் எமக்கு கிடையாது. ஆனால் எமது கட்சியின் ஆதரவில்லாமல் பாதீட்டினை நிறைவேற்றவும் முடியாது.

கடந்த வாரம் யாழ்.மாநகர சபையின் பாதீடு சமர்ப்பிக்கப்பட்டபோது நாம் அதில் பங்கு கொள்ளவில்லை அதற்கு பல காரணங்கள் உண்டு. மாநகர முதல்வர் தெரிவில் எமது கட்சி ஆதரவை வழங்கிய நிலையில் சபையினால் மேற்கொள்ளப்படும் அபிவிருத்தி விடயங்களில் எமது கட்சி புறக்கணிக்கப்படுகிறது. மாநகர சபையில் ஆதிக்கமுள்ள எமது கட்சி மீது தொடர்ச்சியாக இவ்வாறான செயற்பாடுகள் இடம்பெற்றுவரும் நிலையில் தொடர்ந்தும் ஈ.பி.டி.பி யின் தோளில் ஏறி ஆடுவதற்கு விடமுடியாது.

ஆகவே யாழ்.மாநகர சபையின் எதிர்வரும் வரவு செலவு திட்டத்தை ஆதரிப்பது தொடர்பில் பரிசீலிப்போம். என்னிடம் சம்பந்தப்பட்டவர்கள் ஆதரவைக் கோர இதுவரை பேசவில்லை. கட்சி அங்கத்தவர்களுடன் பேசினார்களோ தெரியவில்லை என அவர் மேலும் தெரிவித்தார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.