கார் விபத்தில் காயமடைந்த பிரதமர் மோடியின் தம்பி பிரகலாத் மோடி டிஸ்சார்ஜ்..!!
மைசூரு அருகே கார் விபத்தில் காயமடைந்த பிரதமர் மோடியின் தம்பி பிரகலாத் மோடி ஆஸ்பத்திரியில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். இதையடுத்து நேற்று மாலை அவர் சிறப்பு விமானம் மூலம் குஜராத்திற்கு புறப்பட்டு சென்றார்.
கார் விபத்து
பிரதமர் நரேந்திர மோடியின் தம்பதி பிரகலாத் மோசடி(வயது 69). இவர் தனது குடும்பத்தினருடன் கர்நாடகத்துக்கு சுற்றுலா வந்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் பிரகலாத் மோடி தனது மகன் மற்றும் மருமகள், பேத்தி ஆகியோருடன் காரில் பெங்களூருவில் இருந்து சாம்ராஜ்நகர் குண்டலுபேட்டையில் உள்ள பந்திப்பூர் வனப்பகுதியை சுற்றிப் பார்ப்பதற்காக காரில் சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் மைசூரு கடகோளா பகுதியில் சென்றபோது, திடீரென்று கார் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர தடுப்பு சுவரில் மோதியது. இந்த விபத்தில் பிரகலாத் மோடி, அவரது மகன், மருமகள், பேத்தி மற்றும் கார் டிரைவர் ஆகிய 5 பேர் காயமடைந்தனர். அனைவரும் மைசூரு ஜே.எஸ்.எஸ். ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் நேற்று பிரகலாத் மோடி ‘நானும் எனது குடும்பத்தினரும் உடல் நலத்துடன் இருக்கிறோாம்’ என்று கூறியுள்ளார்.
உயிர் பிழைத்தோம்
இது குறித்து நிருபர்களுக்கு பேட்டியளித்த அவர், ‘குஜராத்தில் இருந்து கர்நாடக மாநில பந்திப்பூருக்கு செல்லும்போது, விபத்து நடந்தது. 2 காரில் சென்றோம். அதில் எங்களது கார் விபத்திற்குள்ளானது. இது எதிர்பாராவிதமாக நடந்த விபத்து. அனைவரும் பாதுகாப்பாக சீட் பெல்ட் அணிந்திருந்தோம். அதனால் உயிர் பிழைத்தோம். எங்களுக்கு சிறிய காயம்தான் ஏற்பட்டது. யாரும் பதற்றம் அடைய தேவையில்லை’ என்றார். பின்னர் ஆஸ்பத்திரியில் இருந்து டிஸ்சார்ஜ் ஆன பிரகலாத் மோடி தனது குடும்பத்தினருடன் குஜராத் செல்ல பா.ஜனதாவினர் சிறப்பு விமானம் ஏற்பாடு செய்திருந்தனர். நேற்று மாலை மைசூரு மண்டகள்ளி விமான நிலையத்தில் இருந்து சிறப்பு விமானம் மூலம் குஜராத் மாநிலம் அகமதாபாத்திற்கு பிரகலாத் மோடி தனது குடும்பத்தினருடன் சென்றார்.