இசை நிகழ்ச்சிக்கு இடையூறு: பொலிஸ் அதிகாரிக்கு சிக்கல்!!
டிசம்பர் 28ஆம் திகதி கொழும்பில் காலி முகத்திடலில் நடைபெற்ற இசை நிகழ்ச்சியின் போது அநாகரீகமான வகையில் நடந்து கொண்ட பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் பணி இடைநிறுத்தப்பட்டுள்ளார்.
28ஆம் திகதி பகல் பணியில் இருந்த அவர், அதே நாள் இரவுப் பணியின் போது தனது சக பணியாளர்களுடன் இசை நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.
இதன்போது, மது போதையில் இருந்த அவர், இசைக்குழு ஒன்றின் நிகழ்ச்சியின் போது மேடையில் ஏறினார்.
அதன் பிறகு, அவரை மேடையில் இருந்து அகற்ற முயன்ற இரண்டு பொலிஸ் அதிகாரிகளை அவர் தாக்கியதாக தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவத்தை தொடர்ந்து பொரலந்த பொலிஸ் பயிற்சி கல்லூரியில் கடமையாற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள் கைது செய்யப்பட்டு கோட்டை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டார்.
நீதிமன்றம் குறித்த நபரை பிணையில் விடுவித்துள்ளதுடன், வழக்கு 2023 ஜனவரி 13ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.