புதிதாக 243 பேருக்கு தொற்று- கொரோனா தினசரி பாதிப்பு சற்று குறைந்தது..!!
இந்தியாவில் கொரோனா பாதிப்பு நேற்று 268 ஆக இருந்த நிலையில், இன்று 243 ஆக குறைந்துள்ளது. இதனால் மொத்த பாதிப்பு 4 கோடியே 46 லட்சத்து 78 ஆயிரத்து 158 ஆக உயர்ந்தது. தொற்று பாதிப்பில் இருந்து நேற்று 185 பேர் நலம் பெற்றுள்ளனர். இதுவரை குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 4 கோடியே 41 லட்சத்து 43 ஆயிரத்து 850 ஆக உயர்ந்துள்ளது. தற்போது 3,609 பேர் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இது நேற்றைவிட 57 அதிகம் ஆகும். கொரோனா பாதிப்பால் நேற்று மகாராஷ்டிராவில் மட்டும் ஒருவர் இறந்துள்ளார். மொத்த பலி எண்ணிக்கை 5,30,699 ஆக உயர்ந்துள்ளது.