;
Athirady Tamil News

மருத்துவமனை அருகே ஆக்ஸிஜன் சிலிண்டர் வெடித்து இருவர் பலி..!!

0

உத்தரபிரதேச மாநிலம் சந்தோலி மாவட்டத்தில் உள்ள தனியார் மருத்துவமனை அருகே இன்று திடீரென ஆக்ஸிஜன் சிலிண்டர் வெடித்து ஏற்பட்ட விபத்தில் 2 பேர் உயிரிழந்தனர். முகல்சராய் நகரின் ரவி நகர் பகுதியில் உள்ள தயாள் மருத்துவமனையின் வெளியே இன்று காலை 9 மணியளவில் திடீரென வெடி விபத்து ஏற்பட்டது இதில், மருத்துவமனை மற்றும் வீடுகளின் ஜன்னல் கண்காடிகள் அதிர்ந்து விழுந்து நொறுங்கின. மேலும், வெடி சத்தம் கேட்டு மக்கள் பயத்தில் வீட்டிற்குள் பதுங்கினர். விபத்து குறித்து தகவல் கிடைத்ததை அடுத்து, உடனடியாக உள்ளூர் காவல் கண்காணிப்பாளர் மற்றும் முகல்சராய் எம்எல்ஏ ஆகியோர் சம்பவ இடத்துக்கு வந்தனர். போலீசார் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள பாதுகாப்பு கேமரா பதிவுகளை அவர்கள் ஆய்வு செய்து வருகின்றனர். இந்நிலையில், விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், அங்கிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில், வெடி விபத்தில் இறந்த இரண்டு பேரின் சடலங்கள் சாலையில் கிடப்பது போன்றும், மருத்துவமனை அருகே ஆக்ஸிஜன் சிலிண்டர்களுடன் லாரி ஒன்று நின்றிருந்ததும் தெரியவந்தது. இந்த லாரியில் இருந்து ஆக்ஸிஜன் சிலிண்டர்களை இறக்கி கொண்டிருந்தபோதுதான் வெடி விபத்து ஏற்பட்டது தெரியவந்துள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.