கைதடியில் ஆறுமுகநாவலர் ஆண்டுவிழா!! (PHOTOS)
யாழ்.கைதடி கிழக்கு சன சமூக நிலைய இந்து வாலிபர் சங்கம் நடாத்திய ஆறுமுகநாவலர் ஆண்டுவிழா, கைதடி கிழக்கு சன சமூக நிலையத்தில் நேற்று(30) இடம் பெற்றது.
இதன்போது நாவலரின் உருவப்படத்திற்கு மலர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது.
இந்த நிகழ்வில் யாழ். பல்கலைக்கழக துணைவேந்தர் சி.சிறிசற்குணராஜா, தெல்லிப்பளை துர்க்காதேவி தேவஸ்தான தலைவர் ஆறு திருமுருகன் உட்பட பலரும் விருந்தினராக கலந்து கொண்டிருந்தனர்.
இதன்போது போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கான சான்றிதழ்களும், பரிசுகளும் வழங்கி வைக்கப்பட்டன.
” இன்றைய சமூகம் நாவலர் காட்டிய வழியில் பயணிக்கிறதா, இல்லையா” என்ற பட்டிமன்றமும், “வள்ளி திருமணம்” இசை நாடகமும் இடம்பெற்றன.