“B” தர கழகங்களுக்கிடயிலான போட்டியில் வென்று ” A” தரத்திற்கு தகுதி பெற்றது மருதமுனை மருதம் விளையாட்டுக்கழகம் !
அம்பாரை மாவட்ட உதைபதந்தாட்டலீக்கினால் 2021/2022 ம் ஆண்டுக்காக நடாத்தப்பட்ட “B” தர கழகங்களுக்கிடயிலான உதைப்பந்தாட்ட சுற்றுத்தொடரில் மருதமுனை மருதம் விளையாட்டுக்கழகம் சம்பியனனாகத் தெரிவு செய்யப்பட்டது.
அம்பாறை மாவட்டத்தின் 28 முன்னணி விளையாட்டுக்கழகங்களின் உதைப்பந்தாட்ட அணிகள் பங்குபற்றிய இச்சுற்றுத்தொடரின் இறுதிப்போட்டி கடந்த வெள்ளிக்கிழமை மருதமுனை செனட்டர் மசூர் மௌலானா விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.
இப்போட்டியில் மருதமுனை மருதம் அணியயை எதிர்த்து மருதமுனை யுனிவரஸ் அணி பலப்பரீட்சை நடாத்தி 2:1 என்ற கோல்கள் வித்தியாசத்தில் மருதம் அணியினர் வெற்றி பெற்று சம்பியனாக தெரிவு செய்யப்பட்டு ” A” தர கழகத்திற்கு தகுதி பெற்றனர்.
இந்த போட்டிகளின் பரிசளிப்பு நிகழ்வில் அம்பாறை மாவட்ட உதைப்பந்து லீக் தலைவரும், முன்னாள் கல்முனை மாநகர சபை உறுப்பினருமான வை.கே. ரஹ்மான், பொதுச் செயலாளரும், முன்னாள் கல்முனை மாநகர சபை உறுப்பினருமான எம்.எச்.எம். அப்துல் மனாப், பொருளாளர் எஸ். முஹம்மட் கான், லீக்கின் நிர்வாக உறுப்பினர்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.