நீரிழிவை கட்டுப்படுத்தும் நாவற்பழம் !! (மருத்துவம்)
பழத்தின் நன்மைகள் பற்றி பொதுவாக அனைவரும் அறிந்த விடயமாகும். நாவல் மரத்தின் பட்டை, பழம் மற்றும் இலை என்பன பல மருத்துவ தேவைகளுக்காகப் பயன்படுத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.
நாவல் பழத்தில் கல்சியம், விட்டமின் சி மற்றும் இரும்புச்சத்து என்பன உள்ளடங்கியுள்ளன. இதனை தொடர்ந்து சாப்பிட்டுவர, பித்தம் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள், இரத்தசோகை, மண்ணீரல் கோளாறுகள் மற்றும் குடற்புண் போன்றன கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்படும்.
மேலும் சிறுநீரகத்தில் ஏற்படும் வலிக்கு சிறந்தத் தீர்வாக நாவற்பழம் விளங்குகின்றது. அதுமட்டுமின்றி, இது நீரிழிவு நோயையும் கட்டுப்பாட்டிற்குள் வைக்கிறது. நீரிழிவு நோயாளிகள் நாவற்பழத்தின் விதைகளை எடுத்து, அவற்றை இடித்து தூள் செய்து தினசரி காலை, மாலை 1 கிராம் அளவு எடுத்து, தண்ணீருடன் கலந்து குடித்துவர, இந்நோயை கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்க உதவுகிறது.
மேலும் நாவற்பழத்தை 3 வேளை தவறாமல் சாப்பிட்டுவந்தால், 15 நாட்களில 10 சதவீதத்தை குறைத்துவிடலாம்.