2023 இல் இங்கிலாந்தின் பிரச்சினைகள் தீராது – எச்சரித்த ரிஷி சுனக் !!
பிரிட்டனின் பிரச்னைகள் 2023-ஆம் ஆண்டில் தீர்ந்து விடாது என பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக் எச்சரித்துள்ளார்.
2022-ஆம் ஆண்டு உலக நாடுகள் பலவும் கடுமையான பொருளாதார நெருக்கடியினை சந்தித்து வருகின்றன. அதில், பிரிட்டன் பொருளாதாரமும் கடுமையாக பாதிக்கப்பட்டது.
இந்த நிலையில் பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக் இவ்வாறு கூறியுள்ளது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
ரிஷி சுனக்
இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 42 வயதான ரிஷி சுனக் கடந்த ஒக்டோபர் மாத இறுதியில் பிரிட்டனின் பிரதமராக பதவியேற்றார்.
ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சியில் ஏற்பட்ட நெருக்கடியால் லிஸ் டிரஸ் பிரதமர் பதவியிலிருந்து விலகியதையடுத்து ரிஷி சுனக் பிரதமராக பொறுப்பேற்றார்.
மேலும் கருத்து தெரிவித்த அவர்,
“இந்த 2023-ஆம் ஆண்டில் பிரிட்டனின் அனைத்துப் பிரச்னைகளும் தீர்ந்துவிடும் என பொய்யாக கூற விரும்பவில்லை.
ரஷ்ய-உக்ரைன்
ஆனால், இந்த 2023-ஆம் ஆண்டு நமக்கு புதிய வாய்ப்புகளை வழங்கி மீண்டும் பிரிட்டன் பொருளாதாரம் சிறப்பாக உருவாகும்.
ரஷ்ய-உக்ரைன் போர் மிகவும் சவாலாக இருக்கப்போகிறது. கொரோனா பேராபத்திலிருந்து மீள்வதற்குள் உக்ரைன் மீது ரஷ்ய காட்டுமிராண்டித்தனமாக போர் தொடுத்து வருகிறது.
ரஷ்யாவின் இந்தத் தாக்குதல் உலக நாடுகளின் பொருளாதாரத்தை பெரிய அளவில் பாதிக்கும்” என தெரிவித்தார்.