புதிய சிக்கலில் சீனா – வடகொரியா..! ஜப்பான் அதிரடி முடிவு!!
தொலைதூர எல்லைகளை தாக்கும் வகையில் ஏவுகணைகளை உருவாக்க இருப்பதாக ஜப்பான் பாதுகாப்பு அமைச்சகம் தகவல் வெளியிட்டுள்ளது.
குறித்த ஏவுகணைகளை 2030க்குள் உருவாக்கவும், இந்த ஏவுகணையானது 1,860 மைல்கள் தொலைவில் சென்று தாக்கக் கூடியதாக இருக்கும் எனவும் தெரிவித்துள்ளனர்.
3,000 கி.மீ தொலைவு வரையில் சென்று தாக்கும் இந்த ஏவுகணைகளால் வடகொரியா மற்றும் சீனாவின் சில பகுதிகளையும் இலக்கு வைக்க முடியும் என ஜப்பான் தெரிவித்துள்ளது.
இரண்டாம் உலக யுத்தத்திற்கு பிறகு ராணுவத்திற்கு என 320 பில்லியன் டொலர் செலவிட முடிவு செய்துள்ளதாக ஜப்பான் இந்த மாத துவக்கத்தில் அறிவித்திருந்தது.
சீனா உடனான மோதல் போக்கு, உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பு பயம் என ஜப்பானை இந்த முடிவுக்கு கொண்டுவந்துள்ளதாக கூறுகின்றனர்.