;
Athirady Tamil News

நடுக்கடலில் அதிசயம்!!

0

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே ஆலம்பாறை என்ற இடத்தில் இருந்து கடலுக்குள் 5 கிலோ மீற்றர் தொலைவில் விசைப்படகில் மரக்காணம் பகுதியை சேர்ந்த மீனவர்கள் தங்கியிருந்து மீன் பிடித்துக்கொண்டு இருந்துள்ளனர்.

இதன்போது திடீரென கடல்நீர் சுழல் போல் மேலெழுந்து மேகங்களுக்குள் இழுக்கப்பட்டுள்ளது.

இக் காட்சியைக் கண்டு அதிர்ச்சியடைந்த மீனவர்கள் தமது தொலைபேசில் அதனை வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவேற்றியுள்ள நிலையில் குறித்த வீடியோவானது இணையத்தில் வைரலாகத் தொடங்கியுள்ளது.

இது குறித்துக் கருத்துத் தெரிவித்த துறைமுக அதிகாரி ‘கடலின் மேல் வீசும் காற்று குளிர்ந்த காற்றாகவும், கடல் காற்று சற்று வெப்பமாகவும் இருந்தால், கடலில் ‘நீர்த்தாரைகள்’ எனப்படும் இந்த அதிசய நிகழ்வு ஏற்படும்.

பொதுவாக பருவநிலை மாற்றம் ஏற்படும் போது இதுபோன்ற நிகழ்வுகள் நடைபெறும்.

இவ்வினோத நிகழ்வின்போது கடலின் நீர் அதிவேகமாக உறிஞ்சப்பட்டு மேகமாக மாறி விடும்.

இந்நிகழ்விற்கு ஆங்கிலத்தில் “டோர்னடோ” என்று பெயர். இதுபோன்ற நிகழ்வுகள் ஐரோப்பா போன்ற பகுதிகளிலேயே அதிக அளவில் இடம்பெறுகின்றன” எனத் தெரிவித்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.