2 ஆண்டுகளுக்குப் பிறகு கொரோனா கட்டுப்பாடின்றி புத்தாண்டைக் கொண்டாடும் ஆஸ்திரேலியா!!
கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு கொரோனா தொற்று காரணமாக உலக நாடுகள் கடுமையாக பாதிக்கப்பட்டது. கொரோனா தொற்று பரவாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஒவ்வொறு நாடுகளும் கட்டுப்பாடுகளை விதித்தன. இதனால், கடந்த இரண்டு ஆண்டுகளாக கட்டுப்பாடுகளுடனே புத்தாண்டு கொண்டாடப்பட்டது.
இந்நிலையில், கொரோனா தொற்று பரவல் குறைந்ததை அடுத்து, ஆஸ்திரேலியாவில் கொரோனா கட்டுப்பாடுகளின்றி புத்தாண்டு கொண்டாடப்பட உள்ளது. புத்தாண்டை வரவேற்கும் உலகின் முதல் முக்கிய நகரங்களில் சிட்னியும் ஒன்றாகும். மேலும் அதன் சின்னமான ஓபரா ஹவுஸில் பொது கவுண்ட்டவுன் மற்றும் வானவேடிக்கைகள் உலகம் முழுவதும் பெரும் தொலைக்காட்சி பார்வையாளர்களை ஈர்க்கும்.
இதனால் சிட்னிக்கு 10 லட்சத்திற்கும் அதிகமான சுற்றுலா பயணிகள் சிட்னியின் துறைமுகத்திற்கு வந்து வானவேடிக்கைகளைக் காண்பார் எகள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சிட்னி ஓபரா ஹவுஸின் நான்கு படகுகளில் இருந்து 2,000 வானவேடிக்கைகளும், சிட்னி துறைமுகப் பாலத்தில் முன்பை விட அதிகமான நிலைகளில் இருந்து 7,000 பட்டாசுகளும் ஏவப்பட்டு சிட்னி துறைமுகத்தை ஒளிரச் செய்யும். 12 ஆண்டுகளுக்குப் பிறகு முதல்முறையாக, நான்கு கட்டிடக் கூரைகளில் இருந்து வானவேடிக்கைகள் ஏவப்பட்டு, கண்கவர் நிகழ்ச்சியை வடிவமைக்கப்படும் என்று ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.
தொற்றுநோய்க்கு முன்னர், உலகின் பிற பகுதிகளிலிருந்து ஒரு பில்லியன் பார்வையாளர்கள் வருகை தந்ததால், சிட்னி மைதானத்தில் ஒரு மில்லியனுக்கும் அதிகமான மக்கள் விழாக்களில் கலந்துகொள்வார்கள் என்று கருதப்படுகிறது.