சூரியன் முதல் சந்திரன் வரை பல திட்டங்களை செயல்படுத்தி 2023-ல் சாதனைக்கு தயாராகிறது இஸ்ரோ!!
ஆதித்யா, சந்திரயான்-3, ககன்யான்விண்கலங்கள், மீண்டும் பயன்படுத்தக்கூடிய ஆர்எல்வி ராக்கெட்டை தரையிறக்குவது உட்பட அறிவியல் சோதனைகள் பலவற்றை இந்தாண்டு மேற்கொள்ள இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் (இஸ்ரோ) திட்டமிட்டுள்ளது.
இஸ்ரோ 2023-ம் ஆண்டில் அறிவியல் திட்டங்கள் பலவற்றை மேற்கொள்ளவுள்ளது. மீண்டும் பயன்படுத்தப்படும் வகையில் உருவாக்கப்பட்ட ஆர்எல்வி ராக் கெட்டை, கர்நாடகாவின் சித்ரதுர்கா மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள ஏரோனாடிக்கல் பரிசோதனை மையத்தில் இன்னும் சில மாதங்களில் இஸ்ரோ தரையிறக்கி பரிசோதிக்கவுள்ளது. சூரியனை பற்றிய ஆய்வை மேற்கொள்ள ஆதித்யா என்ற விண்கலத்தையும் இஸ்ரோ இந்தாண்டு அனுப்பஉள்ளது. இது தவிர நிலவுக்குசந்திரயான்-3 விண்கலத்தையும் இஸ்ரோ அனுப்புகிறது. விண்ணுக்கு மனிதனை அனுப்புவதற் காக மேற்கொள்ளப்படும் ககன்யான் திட்டத்தில், ஆளில்லா விண் கலத்தை இந்தாண்டின் இறுதியில் இஸ்ரோ அனுப்புகிறது.
தவிர இந்தியாவின் ஸ்டார்ட்-அப் நிறுவனங்களும் பல சாதனைகளை படைக்க திட்டமிட்டுள்ளன. நாட்டின் முதல் தனியார் ராக்கெட்டை (விக்ரம்-எஸ்) கடந்த நவம்பரில் விண்ணுக்கு அனுப்பிய ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ் நிறுவனம் இந்தாண்டு செயற்கைகோளை விண்ணுக்கு அனுப்ப திட்டமிட்டுள்ளது.
சென்னை ஐஐடி வளாகத்தில் உருவாக்கப்பட்டுள்ள அக்னிகுல் காஸ்மாஸ் என்ற ஸ்டார்ட்-அப் நிறுவனம், அக்னிபான் என்ற ராக்கெட்டை விண்ணுக்கு ஏவவுள்ளது. இந்தாண்டில் வர்த்தக ரீதியாக6 ஹைபர்ஸ்பெக்ட்ரல் இமேஜரி செயற்கைக்கோள்களை விண் ணில் ஏவ திட்டமிட்டிருப்பதாக பிக்சல் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி அவைஸ் அகமது தெரிவித்துள்ளார்.
இந்திய விண்வெளிச் சங்கத்தின் தலைமை இயக்குனர், லெப்டினன்ட் ஜெனரல் ஏ.கே.பட்(ஓய்வு) கூறுகையில், ‘‘விண்வெளித்துறையில் நுழைந்த ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் எண்ணிக்கை ஏற்கனவே 100-ஐ கடந்துவிட்டது. இந்த நிறுவனங்கள் 245.35 மில்லியன் அமெரிக்க டாலர்கள் (ரூ.2030 கோடி) நிதி திரட்டியுள்ளன’’ என்றார்.
வளரும் நாடுகளுக்கான விண்வெளி திட்ட ஆலோசகர் சைதன்ய கிரி கூறுகையில், ‘‘உக்ரைன் போர் காரணமாக விண்வெளி திட்டங்கள் எதையும்ரஷ்யா தற்போது மேற்கொள்ள வில்லை. விண்வெளி சந்தையில் சீனாவின் நிலையும் இதேதான். இது இந்தியாவுக்கு சாதகம். விண்வெளி சந்தையில் சர்வதேச ஒப்பந்தங்களை இஸ்ரோ மேற்கொள்ள வேண்டும் என எதிர்பார்க்காமல் இந்திய ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் ஈடுபட வேண்டும்.
விண்வெளி ஆராய்ச்சிகளை மேற்கொள்ளும் நிறுவனம் இஸ்ரோ, அது வர்த்தக ஏற்பாடுகளை செய்யும் நிறுவனம் அல்ல.இந்திய ஸ்டார்ட் அப் நிறுவனங்கள், குறு சிறு மற்றும் நடுத்தரநிறுவனங்கள் மற்றும் பெருநிறுவனங்கள் தங்களுக்குள் வர்த்தக ஏற்பாடுகளை செய்து கொள்ள வேண்டும்’’ என்றார்.