அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவி.. தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ஒரே போடு.. ஆஹா!! (PHOTOS)
புலம்பெயர் தொழிலாளர்களுக்கான ரிமோட் ஓட்டுப்பதிவு தொடர்பான ஆலோசனைக்கு தமிழக தேர்தல் ஆணையம் சார்பில் அதிமுகவுக்கு ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பெயரில் கடிதம் அனுப்பப்பட்டது.
அதிமுகவில் ஓ பன்னீர் செல்வம் கட்சியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டு எடப்பாடி பழனிச்சாமி கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளராக செயல்பட்டு வரும் நிலையில் கடிதத்தை அதிமுக தலைமை அலுவலகம் பெற மறுத்து திருப்பி அனுப்பியது. இந்நிலையில் தான் கடித்ததில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என குறிப்பிட்டது ஏன்? என்பதற்கு தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ விளக்கம் அளித்துள்ளார்.
மறைந்த தமிழக முன்னாள் முதலமைச்சரான ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அதிமுகவில் இரட்டை தலைமை உருவாக்கப்பட்டது. அதிமுகவில் ஓ பன்னீர் செல்வம் ஒருங்கிணைப்பாளராகவும், எடப்பாடி பழனிச்சாமி இணை ஒருங்கிணைப்பாளராகவும் தேர்வு செய்யப்பட்டனர்.
இதுதொடர்பான ஆவணங்கள் இந்திய தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அதனை தேர்தல் ஆணையம் ஏற்றுக்கொண்டது. இதையடுத்து அதிமுக இரட்டை தலைமையில் இயங்கி வந்தது. இந்நிலையில் தான் கடந்த ஆண்டின் பாதியில் அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் பூதாகரமாக வெடித்தது.
இந்த விஷயத்தில் ஓ பன்னீர் செல்வம், எடப்பாடி பழனிச்சாமி இடையே மோதல் ஏற்பட்டது. எடப்பாடி பழனிசாமி பொதுக்குழுவைக் கூட்டினார். ஓ பன்னீர் செல்வத்தை கட்சி பொதுக்குழு நீக்கம் செய்ததோடு, கட்சியின் இடைக்காலப் பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி தேர்வு செய்யப்பட்டார்.
இது தொடர்பான ஆவணங்களை இந்திய தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பினார். அதை தேர்தல் ஆணையம் இன்னும் அங்கீகரிக்கவில்லை. இதற்கிடையே எடப்பாடி பழனிச்சாமி இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்ட பொதுக்குழு செல்லாது எனக்கூறி ஓ பன்னீர் செல்வம் தரப்பு தொடர்ந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இன்னும் சில நாட்களில் இந்த வழக்கு விசாரணைக்கு வர உள்ளது.
இந்த விஷயத்தில் ஓ பன்னீர் செல்வம், எடப்பாடி பழனிச்சாமி இடையே மோதல் ஏற்பட்டது. எடப்பாடி பழனிசாமி பொதுக்குழுவைக் கூட்டினார். ஓ பன்னீர் செல்வத்தை கட்சி பொதுக்குழு நீக்கம் செய்ததோடு, கட்சியின் இடைக்காலப் பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி தேர்வு செய்யப்பட்டார். இது தொடர்பான ஆவணங்களை இந்திய தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பினார். அதை தேர்தல் ஆணையம் இன்னும் அங்கீகரிக்கவில்லை.
இதற்கிடையே எடப்பாடி பழனிச்சாமி இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்ட பொதுக்குழு செல்லாது எனக்கூறி ஓ பன்னீர் செல்வம் தரப்பு தொடர்ந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இன்னும் சில நாட்களில் இந்த வழக்கு விசாரணைக்கு வர உள்ளது.
இதற்கிடையே தான் ஓ பன்னீர் செல்வம், எடப்பாடி பழனிச்சாமி அணிகள் இடையே அடிக்கடி வார்த்தை போல் நடைபெற்று வருகிறது. மேலும் ஒவ்வொருவருக்கும் மத்திய அரசு சார்பில் அனுப்பப்படும் கடிதங்கள் முக்கியத்துவம் பெறுகின்றன. குறிப்பாக அந்த கடிதங்களில் அவர்களின் பதவிகள் எப்படி குறிப்பிடப்படுகின்றன என்பது உற்று கவனிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் தான் ஒரே நாடு, ஒரே தேர்தல் தொடர்பாக அதிமுக சார்பில் கருத்து தெரிவிக்குமாறு இந்திய சட்ட ஆணையம் கடிதம் அனுப்பியது. அதில், அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி என்று குறிப்பிடப்பட்டதால், அவரது தரப்பினர் உற்சாகத்தில் இருந்தனர். மத்திய அரசு சார்பில் எடப்பாடி பழனிச்சாமியை அதிமுகவின் பொதுச்செயலாளராக அங்கீகரிக்கப்பட்டுள்ளதாக அவர்கள் கூறி வருகின்றன.
இதற்கு ஓ பன்னீர் செல்வம் தரப்பு அதிருப்தி அடைந்தது. மேலும் அதிமுகவில் தற்போது ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் தான் நடைமுறையில் உள்ளன. எனவே கடிதங்கள் இந்த பதவிகளின் பெயரிலேயே இருக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டது. இந்நிலையில் தான் புலம் பெயர் தொழிலாளர்கள் வாக்களிக்க வசதியாக தேர்தல் ஆணையம் ரிமோட் ஓட்டுப்பதிவு முறையை அமல்படுத்த உள்ளது.
இதுதொடர்பாக ஒவ்வொரு கட்சியினருடன் மாநில தேர்தல் ஆணையம் கருத்து கேட்டு ஆலோசனை நடத்த உள்ளது. அதன்படி தமிழ்நாட்டிலும் ஆலோசனை நடத்தப்பட உள்ளது. இந்நிலையில் புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் வாக்களிக்க வசதியாக தேர்தல் ஆணையம் வடிவமைத்த ரிமோட் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் குறித்து, அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளுக்கு தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹு சில தினங்களுக்கு முன்பு கடிதம் அனுப்பினார்.
திருப்பி அனுப்பப்பட்ட கடிதம்
இந்த கடிதம் அதிமுக தலைமை அலுவலகத்துக்கு அனுப்பப்பட்டது. அதில் கட்சி ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என குறிப்பிடப்பட்டு இருந்தது. இதற்கு பழனிசாமி தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அப்பதவிகளில் யாரும் இல்லை என்று கூறி, அக்கடிதத்தை அதிமுக தலைமை அலுவலகம் திருப்பிஅனுப்பியது.
தேர்தல் அதிகாரி விளக்கம்
இந்நிலையில் தான் அதிமுக விவகாரம் தொடர்பாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ விளக்கம் அளித்துள்ளார். இதுபற்றி அவர் கூறுகையில், ‛‛இந்திய தேர்தல் ஆணையம் கொடுத்த ஆவணங்களின்படியே கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. அந்த ஆவணங்களின் படியே அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர்களின் பெயர்களில் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது” என அவர் விளக்கம் அளித்துள்ளார்.
இதன்மூலம் தற்போது வரை அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவி நடைமுறையில் உள்ளது என்பது தெரியவந்துள்ளது. இது எடப்பாடி பழனிச்சாமி தரப்புக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது.