வட்டி வீதங்கள் குறித்து ஆளுநரின் கருத்து !!
2023 ஆம் ஆண்டில் வட்டி வீதங்கள் மற்றும் பணவீக்கத்தை குறைப்பதில் கவனம் செலுத்துவதாக இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.
கண்டியில் உள்ள தலதா மாளிகைக்கு இன்று (01) விஜயம் செய்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே இந்த விடயத்தை ஆளுநர் குறிப்பிட்டார்.
பணவீக்கத்தை குறைப்பதற்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகளின் பலன்களை தாங்கள் ஏற்கெனவே பார்த்து வருவதாகவும் பணவீக்கம் படிப்படியாக குறைந்து வருவதாகவும் அது மேலும் குறையும் என எதிர்பார்ப்பதாகவும் சுட்டிக்காட்டினார்.
பணவீக்கத்தைக் குறைப்பதற்கு மேலதிகமாக வட்டி வீதங்கள் குறையும் பட்சத்தில், மக்கள் எதிர்கொள்ளும் சிரமங்கள் மேலும் குறையும் என்றார்.