திருந்தவே இல்லை.. போர் பதற்றத்தின் நடுவே உதவப்போன தைவான்.. ஷாக் கொடுத்த சீனா.. கொடுமையின் உச்சம்!!
சீனா, தைவான் இடையே போர் பதற்றம் நிலவி வருகிறது. இதற்கிடையே தான் சீனாவில் கொரோனாவால் ஏராளமானவர்கள் பாதிக்கப்பட்டு பலியாகி வரும் நிலையில் உதவி செய்ய தைவான் தயார் என கூறியுள்ளது. ஆனால் சீனா திருந்தாமல் உள்ள நிலையில் ்தன் அதிபர் ஜி ஜின்பிங் மீண்டும் வன்மத்தை கக்கி உள்ளார்.
சீனாவில் கடந்த 2019ல் பரவ தொடங்கிய கொரோனா அடுத்த 2 ஆண்டுகளாக ஒட்டுமொத்த உலகையும் முடக்கி போட்டது. இதற்கு இந்தியாவும் விதிவிலக்கல்ல. இந்நிலையில் தான் கடந்த ஓராண்டாக கொரோனா பாதிப்பு என்பது சற்று குறைய தொடங்கியது. மக்கள் இயல்பு நிலைக்கு திரும்ப தொடங்கினர்.
இந்நிலையில் தற்போது மீண்டும் சீனாவில் கொரோனா பாதிப்பு பரவ தொடங்கி உள்ளது. சீனாவில் ஓமிக்ரான் உருமாறிய பிஎப் 7 வகை வைரஸ் வேகமாக பரவி வருகிறது.
சீனாவில் தற்போது 140 கோடிக்கும் அதிகமான மக்கள் உள்ள நிலையில் தடுப்பூசி செலுத்தியவர்களையும் கொரோனா வைரஸ் தாக்கி வருகிறது. நாட்டில் தினமும் லட்சக்கணக்கானவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வரும் நிலையில் பல ஆயிரம் பேர் மரணமடைந்து வருகின்றனர். ஒரே நாளில் 3.7 கோடி பேர் அதிகபட்சமாக பாதிக்கப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது. மருத்துவமனைகள் நிரம்பி வழிவதோடு, உடல்களை தகனம் செய்ய முடியாமல் பொதுமக்கள் தவிப்பதாக கூறப்படுகிறது.
சீனாவில் கொரோனா பாதிப்பு உச்சம் தொட்டு இருந்தாலும் கூட அந்நாடு அதுதொடர்பான விபரங்களை வெளியிட மறுத்து வருகிறது. மேலும் புத்தாண்டு தினத்தில் இந்த பாதிப்பு என்பது இன்னும் அதிகரிக்கலாம் என கூறப்படுகிறது. இதற்கிடையே தான் சீனாவில் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளன. இது கூடுதல் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. தற்போதைய சூழலில் சீனாவில் ஒருநாளுக்கு கொரோனாவால் 9 ஆயிரம் இறப்பதாக பிரிட்டனை தலைமையிடமாக கொண்டு செயல்படும் சுகாதர தரவு நிறுவனம் கூறியுள்ளது.
இந்நிலையில் தான் போர் நடவடிக்கையையும் மறந்து சீனாவுக்கு உதவி செய்ய தயாராக இருப்பதாக அண்டை நாடாக செயல்பட்டு வரும் தைவான் அறிவித்துள்ளது. இதுபற்றி தைவான் அதிபர் சாய் இங் வென் இன்றைய புத்தாண்டு உரையில் குறிப்பிட்டுள்ளார். அதில், ‛‛சீனாவில் கொரோனா பாதிப்பு அதிகரிப்பதை சமாளிக்க தேவையான உதவிகளை செய்ய தயாராக இருக்கிறோம்.
மனிதாபிமான அடிப்படையில் தேவை உள்ள வரை தொடர்ந்து உதவிகள் வழங்க தயாராக இருக்கிறோம். இருநாடுகள் இடையேயான பிரச்சனையை பேசி தீர்த்து கொள்ள வேண்டும். போர் என்பது பிரச்சனைக்கு தீர்வல்ல” என கூறியுள்ளார்.
சீனாவின் ஒருபகுதியாக இருந்த தைவான் உள்நாட்டு போரை தொடர்ந்து தனி நாடாக செயல்பட்டு வருகிறது. இதனை சீனா விரும்பவில்லை. தைவான் என்பது சீனாவின் ஒருபகுதி என தொடர்ந்து சீனா கூறி வருகிறது. இதனால் இருநாடுகள் இடையே சுமூகமாக உறவு இல்லை. இந்நிலையில் கடந்த ஆகஸ்ட்டில் அமெரிக்க நாடாளுமன்ற முன்னாள் சபாநாயகர் நான்சி பெலுசி தைவான் செல்ல சீனா எதிர்ப்பு தெரிவித்தது.
இருப்பினும் நான்சி பெலுசி தைவான் சென்ற நிலையில் சீனா தைவானை அச்சுறுத்தியது. சீனாவின் போர் விமானங்கள் வான் எல்லைகளை கடந்து தைவானுக்குள் நுழைந்தால் போர் பதற்றம் ஏற்பட்டது. இந்நிலையில் தான் இதனால் அங்கு போர் பதற்றம் நிலவியது. அதன்பிறகு தொடர்ந்து சீனா, தைவானை அவ்வப்போது சீண்டி வருகிறது. இதற்கிடைய தான் தைவான் அதிபர் சாய் இங்-வென் சீனாவுக்கு உதவி செய்வதாக தெரிவித்துள்ளார்.
இதேபோல் சீன அதிபர் ஜி ஜின்பிங்கும் புத்தாண்டு உரையை நிகழ்த்தினார். அதில் அவர் தைவான் பற்றி மறைமுகமாக குறிப்பிட்டு இருந்தார். இதுதொடர்பாக ஜி ஜின்பிங், ‛‛ தைவான் ஜலசந்தியின் இருபுறமும் உள்ளவர்கள் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள்” என தெரிவித்துள்ளார்.
இதன்மூலம் தைவான் சீனாவுடன் தான் இருக்கிறது என்பதை மறைமுகமாக ஜி ஜின்பிங் கூறி ஷாக் கொடுத்துள்ளார். தைவான், சீனா இடையே ஜலசந்தி எனும் நீர்ப்பகுதி உள்ளது. இது இருநாட்டையும் பிரிக்கிறது. இதனை தான் ஜி ஜின்பிங் அவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இருப்பினும் சீனாவின் கீழ் தைவானை கொண்டு வருவது பற்றிய விஷயங்களையும், தைவானிடம் இருந்து உதவி பெறுவது தொடர்பாகவும் ஜி ஜின்பிங் எதையும் கூறவில்லை.