ATM இயந்திரங்களில் இருந்து பண மோசடி செய்த கும்பல் !!
வங்கிகளின் ATM இயந்திரங்களில் இருந்து பண மோசடி செய்த கும்பல் குறித்த தகவல்கள் வெளியாகியிருப்பதாக பொலிசார் தெரிவித்தனர்.
இந்த சம்பவங்கள் குறித்து விரிவான விசாரணைகள் இடம்பெற்று வருவதாக குறிப்பிட்ட பொலிஸார் கடந்த சில தினங்களில் இடம்பெற்ற சம்பவங்களில் சுமார் ஒரு கோடி 50 இலட்சம் ரூபா மோசடி இடம்பெற்றுள்ளது.
இந்த மோசடிக்காரர்களை கைது செய்வதற்கு பொது மக்களின் உதவியையும் பொலிஸார் நாடியுள்ளனர்.