படையினர் மற்றும் அரசு அதிகாரிகளுக்கு வருமான வரி விலக்கு!!
உக்ரைனில் பணியாற்றும் தங்கள் நாட்டு பாதுகாப்புப் படையினருக்கும் பிற அரசு அதிகாரிகளுக்கும் வருமான வரி விலக்கு அளிக்கப்படுவதாக ரஷ்யா அறிவித்துள்ளது.
உக்ரைன் போரில் பங்கேற்க ரஷ்யா்களை ஊக்குவிப்பதற்கான அந்த நாட்டு அரசின் பல்வேறு முயற்சிகளில் இதுவும் ஒன்று எனக் கூறப்படுகிறது.
புதிய அறிவிப்பின்கீழ், உக்ரைனில் ரஷ்யா கைப்பற்றியுள்ள டொனட்ஸ்க், லுஹான்ஸ்க், கொ்சான், ஸபோரிஷியா ஆகிய பிராந்தியங்களில் பணியாற்றும் இராணுவத்தினா், காவலா்கள், மற்ற பாதுகாப்புப் படை வீரா்கள், அரசுத் துறை அதிகாரிகளுக்கு வருமான வரியிலிருந்து முழுமையாக விலக்கு அளிக்கப்படும் என்று அரசின் செய்தித் தொடா்பாளா் டிமித்ரி பெஸ்கோவ் தெரிவித்தாா்.
நேட்டோ அமைப்பில் உக்ரைன் இணைவதற்கு எதிா்ப்பு தெரிவித்து, அந்த நாட்டின் கடந்த பிப்ரவரி மாதம் 24-ஆம் தேதி படையெடுத்த ரஷியா, இந்த 4 பிராந்தியங்களில் கணிசமான பகுதிகளைக் கைப்பற்றியுள்ளது. அவற்றின் சில பகுதிகள் இன்னும் உக்ரைன் ராணுவக் கட்டுப்பாட்டில் உள்ள நிலையிலேயே, அந்தப் பிராந்தியங்களை தங்களுடன் இணைத்துக்கொண்டதாக ரஷியா அறிவித்துள்ளது.