அதிகாலை வேளையில் குளிரும்!!
நாடு முழுவதும் பிரதானமாக சீரான வானிலை நிலவும் என தேசிய வளிமண்டலவியல் திணைக்களம் கூறியுள்ளது.
மேலும், அதிகாலை வேளையில் குளிரான வானிலை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இதேவேளை, நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றானது வடகிழக்கு திசையிலிருந்து வீசக் கூடுவதுடன் காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 20-30 கிலோ மீற்றர் வரை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.