;
Athirady Tamil News

10 லட்சம் மரணங்கள்.. பல புதிய வேரியண்ட்கள்? சீனாவை பார்த்து உலக நாடுகள் மிரள்வது ஏன்!

0

சீனாவில் இப்போது கொரோனா அலை உச்சம் தொட்டுள்ளது. இது வழக்கத்தைக் காட்டிலும் உலக நாடுகள் மத்தியில் அதிக கவலையை ஏற்படுத்தியுள்ளது. அதற்கான காரணம் என்ன என்பதைப் பார்க்கலாம்.
சீனாவில் இத்தனை காலமாக ஜீரோ கோவிட் பாலிசியை கடைப்பிடித்து வந்ததது. இருப்பினும், இதற்கு எதிராகச் சீன மக்கள் போராட்டம் அதிகரித்தது. இதனால் வேறு வழியில்லாமல் கடந்த மாதம் கொரோனா கட்டுப்பாடுகளைச் சீனா முழுவதுமாக நீக்கியது.

அப்போது உயரத் தொடங்கிய கோவிட் பாதிப்பு அதன் பிறகு குறையவே இல்லை. சீனாவில் வைரஸ் பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், அங்குள்ள மருத்துவமனைகள் அனைத்துமே கோவிட் நோயாளிகளால் நிரம்பியுள்ளன. இது உலகெங்கும் அச்சத்தைக் கிளப்பியுள்ளது.

சீனா
பொதுவாகவே எந்தவொரு நாட்டில் கொரோனா பாதிப்பு அதிகரித்தாலும் கூட, மற்ற நாடுகளிலும் அந்த பாதிப்பு இருக்குமோ என்ற அச்சம் பலருக்கும் இருக்கும். ஆனால், சீனாவில் உயரும் வைரஸ் பாதிப்பு அதைக் காட்டிலும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. அதற்கு என்ன காரணம் என்பதைப் பார்க்கலாம். முதலில் இந்த வைரஸ் பாதிப்பைப் பெரியளவில் இல்லை என்பது போன்ற சீனா கூறி வந்தது. இருப்பினும், நிலைமை கையை மீறிச் சென்றதால், தினசரி பாதிப்பு கணக்குகள் வெளியிடுவதைச் சீனா நிறுத்திக் கொண்டது. மேலும், கொரோனா பரவலை முழுவதுமாக டிராக் செய்வது சாத்தியமற்றது என்பதையும் சீனா ஒப்புக் கொண்டுள்ளது.
டேட்டா
டேட்டா
அந்த பொறுப்பு சீன நோய் கட்டுப்பாடு மையத்திற்கு மாற்றப்பட்டுள்ளது.. இது தினசரி பாதிப்புகளுக்குப் பதிலாக மாதம் எத்தனை பேருக்குப் பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்பது குறித்த தரவுகளை மட்டுமே வெளியிட்டுள்ளது. சீனா கொரோனா மரணம் என்றால் என்ன என்பதற்குப் பல வினோதமான கட்டுப்பாடுகளை விதித்துள்ளன. இதனால் அங்கு வெறும் 15 பேர் மட்டுமே கொரோனா கட்டுப்பாடுகள் நீக்கப்பட்ட பிறகு உயிரிழந்துள்ளதாகக் கூறப்படுகிறது. ஆனால், உணையில் இதைக் காட்டிலும் பல ஆயிரம் பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர் என்பதே அங்கிருக்கும் உண்மை நிலை.

முறையான டெஸ்டிங் இல்லை
இப்போது அங்கு மிகக் குறைந்த அளவிலேயே கொரோனா டெஸ்டிங் செய்யப்படுகிறது. அதை அங்குள்ள அதிகாரிகளே ஒப்புக் கொள்கின்றனர். சீனாவில் உள்ள மருத்துவமனைகள் அனைத்தும் கொரோனா நோயாளிகளால் நிரம்பி வழிகிறது. இந்த சூழலிலும் சீனா கொரோனா பரவல் குறித்த உண்மையான தரவுகளைப் பகிர மறுப்பது சர்வதேச அளவில் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. முறையான தரவுகள் இல்லாததால் அமெரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் கனடா உள்ளிட்ட பல நாடுகள் சீனாவில் இருந்து வருவோருக்கு கட்டுப்பாடுகளை விதித்தது. உலக சுகாதார மையமும் கூட தெளிவாக டேட்டாவை வெளியிடுமாறு சீனாவிடம் வலியுறுத்தியுள்ளது.

உச்சத்தில் பாதிப்பு
உள்ளூர் அதிகாரிகள் அங்குள்ள நிலைமை குறித்து அளிக்கும் தகவல்கள் பகீர் கிளப்பும் வகையில் உள்ளது. சீனாவின் வணிக தலைநகராகக் கருதப்படும் ஷாங்காய் மக்கள் தொகையில் கிட்டதட்ட 40% பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்படுக்கிருக்கும் எனக் கணிக்கப்படுகிறது. அங்குள்ள கடரோல மாகாணமான செஜியாங்கில் கடந்த வாரமாகத் தினசரி பாதிப்பு 10 லட்சத்திற்கும் மேல் உள்ளதாகச் சிலர் கூறுகின்றனர். குசோவ் மற்றும் ஜூஷான் நகரங்கள், குறைந்தபட்சம் 30 சதவீத மக்கள் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அங்குள்ள பெரும்பாலான நகரங்களில் இதுதான் நிலைமை

10 லட்சம் பேர் உயிரிழப்பு
அங்குள்ள முக்கிய நகரங்களில் கொரோனா முதல் உச்சம் கடந்துவிட்டது. அடுத்து இரண்டாம் கட்ட நகரங்களில் இப்போது வைரஸ் உச்சமடைந்து வருவதாக வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். கடந்த டிசம்பரில் முதல் 20 நாட்களில் மட்டும் சீனாவில் 25 கோடி பேர் வைரசால் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. ஹாங்காங் பல்கலைக்கழகம் இன்னுமே மோசமான ஒன்றைக் கணித்துள்ளது. அதாவது இந்த குளிர் காலத்தில் மட்டும் சுமார் 10 லட்சம் பேர் சீனாவில் உயிரிழக்கலாம் என்று ஹாங்காங் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. ஏர்ஃபினிட்டி டேட்டாபடி அங்குத் தினசரி 11,000 உயிரிழப்புகளும், 18 லட்சம் பாதிப்புகளும் இருக்கும் என்று கூறுகிறது. வரும் காலங்களில் இது மேலும் மோசமடையலாம் என்றும் கூறப்படுகிறது.

புதிய வேரியண்ட்கள்
அதேபோல சீனாவில் புதிய வேரியண்ட்கள் இருக்கும் என்ற தகவலும் உலக நாடுகளைக் கலக்கத்தில் ஆழ்த்தியுள்ளன. இருப்பினும், இந்த அலைக்கு புதிய வேரியண்ட்கள் காரணம் என்பதற்கு ஆதாரம் எதுவும் இதுவரை இல்லை.. சீனாவில் டெல்டா கொரோனா இன்னும் இருக்கலாம்.. அதேபோல ஓமிக்ரான் துணை வேரியண்ட்களான BA.5.2 மற்றும் BF.7 அங்கு அதிகம் உள்ளது. அதாவது சர்வதேச அளவில் கடந்த ஜூலை முதல் டிசம்பர் வரை ஆதிக்கம் செலுத்திய வேரியண்ட்கள் தான் இப்போது சீனாவில் உள்ளன.

கவலை
அதேநேரம் இப்போது உலகில் அதிகம் பரவும் XBB, BQ வேரியண்ட்கள் இன்னும் சீனாவில் பரவவில்லை. அதுவும் பரவ தொடங்கினால் நிலைமை மேலும் மோசமாகும்.. இதுபோன்ற ஒரு குழப்பமான சூழல் இருப்பதால் சீனா உண்மையான டேட்டாக்களை பகிர வேண்டும் என்பதே உலக நாடுகளின் கோரிக்கையாக உள்ளது. உண்மையான டேட்டாக்களை சீனா வழங்கினால் மட்டுமே அதற்கேற்ப நடவடிக்கை எடுக்க முடியும் என்பதை உலக நாடுகளின் கோரிக்கையாக உள்ளது. இருப்பினும், சீனா அதைக் கேட்காமல் உண்மை நிலையைக் குறைத்துக் காட்டும் வகையிலேயே செயல்பட்டு வருகிறது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.