இங்கிலாந்து மன்னர் சார்லசுடன் பிரதமர் மோடி தொலைபேசியில் பேச்சு!!
இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத் மறைவுக்கு பின் வாரிசுப்படி அவரது மகனான சார்லஸ், இங்கிலாந்து மன்னராக பொறுப்பேற்றார். இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி இங்கிலாந்து மன்னர் சார்லசுடன் தொலைபேசி வாயிலாக கலந்துரையாடினார்.
இந்தப் பேச்சின்போது இரு நாடுகளிடையே பரஸ்பரம் ஒத்துழைப்பு, நட்புறவு உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து இருவரும் விவாதித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுதொடர்பாக, பிரதமர் மோடி வெளியிட்ட டுவிட்டர் செய்தியில், மன்னர் மூன்றாம் சார்லசுடன் பேசியது மகிழ்ச்சியாக இருந்தது.
சுற்றுச்சூழல் பாதுகாப்பு, காலநிலை பின்னடைவு மற்றும் காமன்வெல்த் உள்ளிட்ட பரஸ்பர நலன்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. இந்தியாவின் ஜி20 பிரசிடென்சியின் முன்னுரிமைகள் மற்றும் மிஷன் லைப்இன் சாத்தியக் கூறுகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது என பதிவிட்டுள்ளார்.