சபரிமலை சன்னிதானத்தில் சிறுமிகள் ஆடிய திருவாதிரை நடனம்!!
சபரிமலை ஐயப்பன் கோவிலில் மகர விளக்கு பூஜைக்கான விழா நடந்து வருகிறது. இந்த விழாவில் பங்கேற்க தினமும் 90 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் வருகிறார்கள். இவர்களின் கூட்டத்தால் சபரிமலையில் 18-ம் படி ஏற பலமணி நேரம் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
இதற்கிடையே புத்தாண்டு தினத்தன்றும் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. அவர்கள் நடை பந்தலில் பல மணி நேரம் காத்திருந்து அய்யப்பனை தரிசனம் செய்தனர். சபரிமலை சன்னிதானத்தில் பக்தர்கள் காத்திருக்கும் நடைபந்தல் அருகே உள்ள கலையரங்கில் சிறுமிகளின் திருவாதிரை நடன நிகழ்ச்சி நடந்தது.
திருவாதிரை ராகங்கள் மற்றும் குறத்தி பாட்டு உள்ளிட்ட பாடல்களுக்கு சிறுமிகள் நடனம் ஆடினர். புத்தாண்டு தினத்தில் ஐயப்பனை தரிசிக்க வந்த பக்தர்கள் சிறுமிகளின் நடனத்தை பார்த்து பரவசம் அடைந்தனர்.
சபரிமலையில் வருகிற 14-ந் தேதி மகர ஜோதி தரிசனம் நடக்கிறது. அதன்பிறகு 20-ந்தேதி வரை கோவில் நடை திறந்து இருக்கும். அதுவரை கோவிலில் பக்தர்கள் தரிசனம் செய்யலாம்.