உக்ரேனின் அதிரடித் தாக்குதலால் கொல்லப்பட்ட ரஷ்ய படைகள்; உயிரிழப்பிற்கான காரணத்தை வெளியிட்ட ரஷ்யா! !!
ரஷ்யா மற்றும் உக்ரைன் படையினருக்கு இடையிலான மோதல் தொடர்ந்து வலுவடைந்த வண்ணம் உள்ளது.
இந்தநிலையில், ரஷ்ய படைகள் மீது உக்ரைன் இராணுவம் நடத்திய தாக்குதலில் 89 பேர் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த உயிரிழப்பை ரஷ்யா உறுதிப்படுத்தியுள்ளது.
குறித்த உயிரிழப்புகளுக்கு தமது இராணுவத்தினர் தொலைபேசிகளை பயன்படுத்தியதே காரணம் என ரஷ்ய தரப்பு கூறியுள்ளது.
ரஷ்ய படையினர் தொலைபேசி பயன்படுத்துதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும் இதனை மீறி ரஷ்ய படைகள் தொலைபேசி பயன்படுத்தியதால் உக்ரைன் தெளிவாக இலக்கை கண்டுபிடித்து தாக்க முடிந்துள்ளதாக ரஷ்யா தெரிவித்துள்ளது.
கடந்த முதலாம் திகதி புத்தாண்டு தினத்தில் யுக்ரைனிய படையினர் நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் 63 ரஷ்ய படையினர் கொல்லப்பட்டதாக ரஷ்யா உறுதிப்படுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.
குறித்த சம்பவம் ரஷ்யாவின் கட்டுப்பாட்டில் உள்ள டோனெட்ஸ்கிலுள்ள மெகைவ்கா எனும் சிறிய நகரில் இடம்பெற்றுள்ளது.