சாம்சங் கேலக்ஸி F04 ஸ்மார்ட்போன் விற்பனை தொடக்கம்: நள்ளிரவு 12 மணி முதல் இந்தியாவில் விற்பனைக்கு வந்தது !!
பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சாம்சங் கேலக்ஸி F04 ஸ்மார்ட்போன்கள் இந்தியாவில் இன்று விற்பனைக்கு வருகிறது. மீடியா டெக் P35 சிப் கொண்ட சாம்சங் கேலக்ஸி F04 ஸ்மார்ட்போன்கள் அலைபேசி உபயோகிப்பாளர்கள் விருப்பத்திற்குரிய ஒன்றாக கருதப்படுகிறது. இந்த மாடல் எப்போது விற்பனைக்கு வருமென பெரிதாக எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இன்று நள்ளிரவு 12 மணி முதல் இந்தியாவில் விற்பனைக்கு வந்துள்ளது. இதனையடுத்து பிளிப்கார்டில் தேடுதல் பட்டியலில் சாம்சங் கேலக்ஸி F04 ஸ்மார்ட்போன்கள் சேர்க்கப்பட்டன. மீடியா டெக் P35 Processor, 8GB of RAM மற்றும் 5000MAH Battery கொண்ட இந்த அலைபேசி வாடாமல்லி மற்றும் பச்சை நிறங்களில் விற்பனைக்கு வருகிறது.
அதேபோல 1+ 11 மாடல் ஸ்மார்ட்போனை சீனாவில் இன்று அறிமுகம் செய்கிறது 1+ நிறுவனம். மிகவும் ரகசியமாக வைக்கப்பட்டிருந்த 1+11 மாடல் ஸ்மார்ட்போன் குறித்த தகவல்கள் யாரும் எதிர்பாராத வகையில் நெற்றே இணையத்தளங்களில் வெளியானது. இன்று சீனாவில் அறிமுகமாகும் 1+11 மாடல் ஸ்மார்ட்போன் வரும் பிப்ரவரி மாதம் 7-ம் தேதி தான் இந்தியாவில் டெல்லியில் விற்பனைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.