உலக நாடுகளின் முடிவால் சீனா கொந்தளிப்பு !!
சீனாவில், கொரோனா வைரஸ் பரவல் திடீரென அதிகரித்துள்ளது.
இதையடுத்து சீனாவில் இருந்து வரும் பயணிகள், கொரோனா தொற்று இல்லை என்ற சான்றிதழை சமர்ப்பிப்பதை அமெரிக்கா, ஜப்பான், கனடா, பிரான்ஸ், அவுஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகள் கட்டாயமாக்கியுள்ளன.
சீனாவில் இருந்து வரும் பயணிகளுக்கு மட்டுமே கொரோனா சான்றிதழை கட்டாயமாக்கி இவ்வாறான நாடுகள் உத்தரவிட்டுள்ளன.
இது ஒருதலைபட்சமானது என சீன வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் மாவோ நிங் கூறியுள்ளார்.
எங்கள் நாட்டைச் சேர்ந்த பயணிகளுக்கு மட்டும் கொரோனா பரிசோதனை சான்றிதழ் கட்டாயமாக்கப்பட்டுள்ளதை ஏற்க முடியாது.
அறிவியல் பூர்வமாக எந்த ஆய்வும் செய்யாமல் இவ்வாறு தடை விதித்துள்ளதை ஏற்க முடியாது.
இதற்கான எதிர்வினையை சந்திக்க நேரிடும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.