ஆப்கானுக்கான நிதி உதவியை நிறுத்தவுள்ள ஜேர்மனி !!
ஜேர்மனியின் இலாப நோக்கற்ற குழுக்கள் ஆப்கானிஸ்தானில் தங்கள் செயல்பாடுகளை இடைநிறுத்தி, அதைச் செய்த ஏனைய மனிதாபிமான அமைப்புகளின் நீண்ட பட்டியலில் இணைந்துள்ளதாக காமா பிரஸ் தெரிவித்துள்ளது.
பெண்கள் தன்னார்வ தொண்டு நிறுவனங்களுடன் பணிபுரிவதையும் சர்வதேச நிறுவனங்களுக்கு வேலைக்குச் செல்வதையும் தலிபான்கள் தடைசெய்த பின்னரே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
பெண்கள் தனியார் அல்லது சர்வதேச குழுக்களில் பணிபுரிவதைத் தடை செய்யும் புதிய ஆளும் ஆட்சியின் உத்தரவு ஆப்கானிஸ்தானின் நடைமுறை அதிகாரிகளுக்கு குறிப்பிடத்தக்க அடி விழுந்துள்ளது.
ஜேர்மனி அரசாங்கம், ஆப்கானிஸ்தானில் பெண்கள் மீதான தலிபான்களின் சமீபத்திய அடக்குமுறைக்குப் பின்னர் ஆப்கானிஸ்தானுக்கான நிதி உதவியை நிறுத்த திட்டமிட்டுள்ள காமா பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
அரசு சார்பற்ற நிறுவனங்களில் பெண் ஊழியர்களை பணியமர்த்த தடை விதித்ததன் மூலம், ஆப்கானில் உள்ள தலிபான்கள் அந்நாட்டு மக்களுக்கு உதவி செய்வதில் பொறுப்பற்ற அடியை அடித்துள்ளனர் என்று அபிவிருத்தி அமைச்சர் ஸ்வென்ஜா ஷூல்ஸ் ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளார் என காமா பிரஸ் குறிப்பிட்டுள்ளது.
ஆப்கானுக்கான ஜேர்மகியின் பங்களிப்புகள் 430 மில்லியன் யூரோக்களை எட்டியுள்ளதாக ஜேர்மனியின் பொருளாதார ஒத்துழைப்பு மற்றும்அபிவிருத்தி அமைச்சின் தகவல்கள் தெரிவிக்கிறது.
இது அமெரிக்காவுக்குப் பின்னால் உள்ள இரண்டாவது பெரிய நன்கொடை நாடு என்று தெரியவருகிறது. ஆப்கானிஸ்தானில் பொருளாதாரம் மற்றும் மனிதாபிமானம் அழிவுகரமானதாகவே உள்ளது.
பெண்களுக்கான பல்கலைக்கழகக் கல்வியையும், பெண்களுக்கான இடைநிலை பாடசாலைக் கல்வியையும் மேலும் அறிவிக்கும் வரை இடைநிறுத்திய பின்னர், அரசு சாரா நிறுவனங்களில் பெண்கள் பணிபுரிவதைத் தடை செய்யும் ஆணையை நடைமுறை அதிகாரிகள் டிசெம்பர் 24இல் வெளியிட்டனர்.
ஆப்கானிஸ்தானில் பெண்களுக்கு உயர்கல்விக்கான தடை உலகம் முழுவதிலும் இருந்து பரவலான எதிர்வினைகளை ஈர்த்துள்ளது மற்றும் நாட்டில் தலிபான்களின் கடுமையான கொள்கைகளுக்கான விமர்சனங்களை பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.