கடத்தப்பட்ட 108 மாணவிகள் – டெரகோட்டா முகச்சிற்பங்களாக வடிவமைத்த பல்கலைக்கழக மாணவிகள்!
நைஜிரியாவில் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட 108 மாணவிகளை டெரகோட்டா முகச்சிற்பங்களாக வடிவமைத்துள்ளனர்.
தென்மேற்கு நைஜீரியா இஃபேவில் உள்ள பல்கலைக்கழகமொன்றில் உள்ள மாணவிகளே இவ்வாறு வடிவமைத்துள்ளனர்.
குறித்த 108 முகச்சிற்பங்களும் நைஜீரியா லாகோஸ் நகரில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.
கடந்த 2014ம் ஆண்டு நைஜீரியாவின் போர்னோ மாகாணம் சிபோக்கில் போகோ ஹராம்’ பயங்கரவாதிகளால் 270 மாணவிகள் கடத்தப்பட்டனர்.
குறித்த சம்பவம் உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.
பின்னர் 160 பெண்களை பயங்கரவாதிகள் விடுதலை செய்யப்பட்டதுடன், மிகுதி பெண்களின் நிலை தொடர்பில் இதுவரை எந்தத் தகவலும் வரவில்லை.
எட்டு வருடங்களிற்கு முன் காணாமல்போன குறித்த 108 பெண்களின் புகைப்படங்களை அவர்களது குடும்பத்தினரிடம் வாங்கிய பிரான்ஸைச் சேர்ந்த ப்ருனே நௌரி என்ற கலைஞர் வொர்க் ஷாப்பிற்கு வந்த மாணவிகளுக்கு அதை கொடுத்து டெரகோட்டா முகச்சிற்பங்களாக வடிவமைத்துள்ளார்.
சிலைகளும் சுவாசிக்கின்றன என்ற தலைப்பில் குறித்த 108 சிற்பங்களும் நைஜீரியா லாகோஸ் நகரில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.