டொலரின் பெறுமதியில் இன்று ஏற்பட்ட மாற்றம்..!
அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி தொடர்பில் மத்திய வங்கி தகவல் வெளியிட்டுள்ளது.
இதன்படி, நேற்றைய தினத்துடன் ஒப்பிடுகையில் ரூபாவின் பெறுமதியில் சிறு அதிகரிப்பு பதிவாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள இன்றைய நாணய மாற்று விகிதங்களின்படி, அமெரிக்க டொலரின் விற்பனை விலை 371.57 ரூபாவாகவும், கொள்வனவு விலை 359.97 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.
அதே நேரத்தில் யூரோவுக்கு எதிராக ரூபாவின் பெறுமதியில் சிறு வீழ்ச்சி பதிவாகியுள்ளதுடன், பல வெளிநாட்டு நாணயங்களுக்கு எதிராக ரூபாவின் மதிப்பு தளம்பல் நிலையில் உள்ளது.
ஸ்ரேலிங் பவுண் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 432 ரூபா 79 சதம் – விற்பனை பெறுமதி 449 ரூபா 43 சதம்
யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 380 ரூபா 87 சதம் – விற்பனை பெறுமதி 396 ரூபா 39 சதம்
சுவிஸ் பிராங் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 385 ரூபா 14 சதம் – விற்பனை பெறுமதி 403 ரூபா 46 சதம்
கனடா டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 265 ரூபா 31 சதம் – விற்பனை பெறுமதி 277 ரூபா 24 சதம்
அவுஸ்திரேலிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 244 ரூபா 25 சதம் – விற்பனை பெறுமதி 255 ரூபா 44 சதம்