மணிப்பூரில் பழங்குடியினர்களின் அறுவடை திருவிழா கோலாகலம்: பாரம்பரிய உடைகளை அணிந்து நடனமாடி மகிழ்ச்சி..!!
மணிப்பூரில் அறுவடை திருவிழாவை ஒட்டி நடைபெற்ற பழங்குடியின மக்களின் பாரம்பரிய நடனம் பார்வையாளர்களை வசீகரம் செய்தது. மணிப்பூரில் பெரும்பான்மையாக வசிக்கும் ஜெலியாங்ராங் பழங்குடியின மக்கள் ஆண்டுதோறும் ஜனவரி 4ம் தேதி அறுவடைக்கால திருவிழாவை கொண்டாடி வருகின்றனர்.
கான்-ங்காய் என்னும் பேரில் கொண்டாடப்படும் அறுவடை திருவிழாவில் பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள் நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டும் ஜெலியாங்ராங் பழங்குடியின மக்களின் ஐந்து நாட்கள் நடனத்திருவிழா நேற்று தொடங்கியது. தலைநகர் நேபாளில் இம்பாலில் கோலாகலமாக நடைபெற்ற நிகழ்ச்சியில் பழங்குடியின கலைஞர்கள் பாரம்பரிய உடைகளை அணிந்து குழுவாக நடனமாடினர்.