;
Athirady Tamil News

ரஷ்ய அதிபரின் போர் நிறுத்த அறிவிப்பு திட்டமிட்ட நாடகம்; தங்கள் தரப்பு தாக்குதல் தொடரும் என உக்ரைன் அறிவிப்பு!!

0

ரஷ்ய அதிபரின் போர் நிறுத்த அறிவிப்பு திட்டமிட்ட நாடகம் என உக்ரைன் விமர்சனம் செய்துள்ளது. ரஷ்யா-உக்ரைன் மோதல் 316வது நாளை எட்டிவிட்டது. இருநாடுகளும் சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட வேண்டும் என்று உலக நாடுகள் கோரிக்கை வைத்துள்ளன. உக்ரைன் இறங்கி வந்தாலும் ரஷ்ய அதிபர் புதின் சம்மதிக்கவில்லை. தற்போது முதன்முறையாக அவர் சம்மதம் தெரிவித்து உள்ளார். உக்ரைனில் ரஷ்யா ஆக்கிரமித்துள்ள பகுதிகளை ரஷ்ய பகுதியாக ஏற்றுக்கொண்டால், உக்ரைனுடன் பேச்சுவார்த்தை நடத்தத் தயாராக இருப்பதாக புதின் தெரிவித்துள்ளார்.

இதனிடையே ஆர்த்தோடாக்ஸ் கிறிஸ்துமஸ் கொண்டாட வசதியாக இன்று மதியம் முதல் நாளை வரை 36 மணி நேரம் போரை நிறுத்த அதிபர் புதின் உத்தரவிட்டுள்ளார். இந்நிலையில் இது குறித்து கருத்து தெரிவித்துள்ள உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி; ரஷ்ய அதிபரின் போர் நிறுத்த அறிவிப்பு திட்டமிட்ட நாடகம். உக்ரைனில் ரஷ்யா பிடித்து உள்ள பகுதிகளை விட்டு முதலில் வெளியேற வேண்டும். அப்போது தான் அது தற்காலிக போர் நிறுத்தமாக இருக்கும். போர் முடிவு பிரகடனம் ரஷ்யாவின் தந்திரமாகும். போரை முடிவுக்கு கொண்டு வருவதில் எங்களுக்கு விருப்பம் இல்லை.

ரஷ்யாவின் சூழ்ச்சி முயற்சிக்கு பதில் அளிக்க வேண்டியது இல்லை. ஆயுதங்களை குவிக்கவே ரஷ்யா போர் நிறுத்த நாடகம் செய்கிறது. தங்களது தாக்குதல் தொடரும் என திட்டவட்டமாக அறிவித்தார். இதனால் பரபரப்பு நிலவி வருகிறது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.