விரைவில் ரணிலும் ஓடுவார்…!!
மிக மோசமான முறையில் ஆட்சியைக் கொண்டு செல்கின்றார் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க. கோட்டாபயவை போன்று ரணிலும் விரைவில் ஓடுவார் என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹேஷா விதானகே தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பிரதேச சபை உறுப்பினராக ஆவதற்குக் கூட முடியாமல் இருந்தவர். நாட்டைச் சீரழித்தவர்கள் தங்களைப் பாதுகாத்துக்கொள்வதற்காக ரணிலை ஜனாதிபதியாக்கி உள்ளார்கள்.
ரணிலைச் சிறைக்கு அனுப்பும் வரை நித்திரை கொள்ளமாட்டோம் என்று சொன்னவர்கள் இன்று ரணில்தான் சரியான தலைவர் என்கின்றார்கள், அவர்கள் தான் ரணிலை ஜனாதிபதியாக்கியுள்ளார்கள்.
க்களின் போராட்டங்களை, பிரச்சினைகளை ஒதுக்கி வைத்துவிட்டு அவரது விருப்பத்தின்படி மிக மோசமான முறையில் ஆட்சியைக் கொண்டு செல்கின்றார்.
கோட்டாபய போன்று தான் ரணிலின் ஆட்சியும் இருக்கின்றது, எனவே கோட்டாவைப் போன்று ரணிலும் விரைவில் பதவி துறந்து ஓடுவார் என தெரிவித்துள்ளார்.