;
Athirady Tamil News

மகர சங்கராந்தியை முன்னிட்டு நைலான் மாஞ்சா கயிறு விற்பவர்கள் மீது நடவடிக்கை!!

0

மகர சங்கராந்தி விழா வரும் 14-ம் தேதி நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. இந்நாளில் ஏராளமானோர் ‘காற்றாடி’ பறக்கவிடுவது வழக்கம். சிலர் காற்றாடி பறக்கவிடுவதற்கு நைலான் மாஞ்சா பயன்படுத்துவர்.

இது பறவைகள், விலங்குகள் மற்றும் வாகனங்களில் செல்வோருக்கு ஆபத்தை ஏற்படுத்தும். இதனால் நைலான் மாஞ்சா பயன்படுத்துவற்கு அரசு தடை விதித்துள்ளது. ஆனால், அதையும் மீறி சிலர் நைலான் மாஞ்சா விற்பனை செய்கின்றனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க சிறப்பு போலீஸ் படை மகாராஷ்டிராவின் லத்தூர் மாவட்டத்தில் உருவாக்கப்பட்டுள்ளது.

விதிமுறைகளை மீறுபவர்கள் மீது இவர்கள் நடவடிக்கை எடுப்பர். பொது மக்கள் யாரும் நைலான் மாஞ்சா பயன்படுத்த வேண்டாம் என போலீஸார் வேண்டுகோள் விடுத்துள்ளனர். நைலான் மாஞ்சாவை யாராவது பயன்படுத்தினால் அது பற்றி போலீஸுக்கு தகவல் தெரிவிக்கும்படியும் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.