;
Athirady Tamil News

தபால் பெட்டி சின்னத்தில் அரவிந்தகுமார்!!

0

உள்ளுராட்சிமன்ற தேர்தலில் ஐக்கிய மக்கள் முன்னணி மற்றும் ஜனநாயக மக்கள் காங்கிரஸ் ஆகியன கூட்டணியாக இணைந்து தபால் பெட்டி சின்னத்தில் போட்டியிட தீர்மானித்துள்ளதாக ஐக்கிய மக்கள் முன்னணியின் பிரதி பொது செயலாளர் எஸ்.அஜித்குமார் தெரிவித்தார்.

உள்ளுராட்சிமன்ற தேர்தலுக்கான வேட்புமனு கோரல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையிலேயே முன்னணியின் பிரதி பொது செயலாளர் இந்த கருத்தை தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது, ஐக்கிய மக்கள் முன்னணி மற்றும் ஐக்கிய தொழிலாளர் முன்னணியின் தலைவரும், பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், கல்வி இராஜாங்க அமைச்சருமான அ.அரவிந்தகுமார் தலைமையில் ஐக்கிய மக்கள் முன்னணி சார்பில் மத்திய, ஊவா, சப்ரகமுவ ஆகிய மாகாணங்களில் போட்டியிடவுள்ளதோடு, ஜனநாயக மக்கள் காங்கிரஸின் தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான பிரபா கணேசன் தலைமையில் ஜனநாயக மக்கள் காங்கிரஸ் சார்பில் மேல் மாகாணம் மற்றும் வடக்கு, கிழக்கு ஆகிய பகுதிகளில் போட்டியிடவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

மலையகத்தில் பல கட்சிகள் இருக்கின்ற போதிலும் மக்களுடைய தேவைகளை அறிந்து செயல்படாமல் இருந்ததன் காரணமே இன்று மக்கள் பல்வேறு உரிமை ரீதியாக பாதிக்கப்பட்டுள்ளதுடன், தங்களது தேவைகளை கூட நிவர்த்தி செய்து கொள்ள முடியாத நிலைமையிலேயே வாழ்ந்து வருகின்றனர்.

அதேவேளை, புதிதாக ஆரம்பிக்கப்பட்ட கட்சி என்ற ரீதியில் நாங்கள் மக்களுடைய அபிலாஷைகளை பூர்த்தி செய்ய வேண்டும் என்ற நோக்கிலேயே தான் இம்முறை நடைபெறவுள்ள உள்ளுராட்சி மன்ற தேர்தலில் களம் இறங்க மக்களுடைய ஆணையை பெற்று இம்முறை தேர்தலிற்கு தயாராகிவுள்ளோம்.

எனவே, எமது கட்சியின் ஊடாக உள்ளுராட்சி சபை தேர்தலில் போட்டியிட விரும்புவர்கள் தங்களுடைய விண்ணப்பபடிவங்களை பூர்த்தி செய்து ஐக்கிய மக்கள் முன்னணியின் நிர்வாக குழுவிற்கு அனுப்பி வைக்குமாறு கேட்டுக்கொள்கின்றோம் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.