பீகாரில் சாதி வாரி மக்கள் தொகை கணக்கெடுக்கும் பணி தொடங்கியது!!
பீகார் மாநிலத்தில் சாதி வாரி மக்கள் தொகை கணக்கெடுக்கும் பணி இன்று தொடங்கியது. இந்த பணி முதல் கட்டமாக இன்று முதல் வருகிற 21-ந்தேதி வரையும். 2-ம் கட்ட பணி ஏப்ரல் 1-ந்தேதி முதல் 30-ந்தேதி வரையிலும் நடைபெற உள்ளது. இந்த பணியில் சுமார் 3 லட்சத்து 50 ஆயிரம் அரசு ஊழியர்கள் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.
இது குறித்து பீகார் முதல்-மந்திரி நிதிஷ்குமார் கூறியதாவது:- இந்த கணக்கெடுப்பு மூலம் மாநில மக்கள் தொகை மட்டுமல்லாது சாதிவாரி பொருளாதார நிலை குறித்தும் அறிந்து கொள்ள முடியும். பிற்பட்டவர்களை அறிந்து அவர்களை மேம்படுத்த என்ன செய்ய வேண்டும் என்ற தெளிவு கிடைக்கும்.
அனைத்து தரப்பு மக்களின் வாழ்வாதாரத்தை முன்னேற்றம் அடைய செய்யும் நோக்கத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது. இந்த ஆண்டு மே இறுதியில் இந்த பணி இறுதி கட்டத்தை அடையும். இவ்வாறு அவர் கூறினார்.