தீவிரவாதத்துக்கு எதிராக பாகிஸ்தானில் பழங்குடி மக்கள் திடீர் போராட்டம்!!
பாகிஸ்தானில் அதிகரித்து வரும் தீவிரவாத சம்பவங்களை கண்டித்து 5ஆயிரம் பழங்குடியின மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். பாகிஸ்தானில் பழங்குடியின மக்கள் வசிக்கும் பகுதிகளில் தீவிரவாத சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றது. பழங்குடியினருக்கு எதிராக தாக்குதல் மற்றும் கடத்தல் சம்பவங்களும் தொடர்கின்றன.
குறிப்பாக கைபர் பக்துன்க்வா மற்றும் பலுசிஸ்தான் மாகாணங்களில், தடைசெய்யப்பட்ட ஆப்கானிஸ்தானை சேர்ந்த டெக்ரிக் இ தலிபான் பாகிஸ்தான் தீவிரவாத அமைப்பு தீவிரவாத தாக்குதல்களில் ஈடுபட்டு வருவதாக கருதப்படுகின்றது.
இந்நிலையில் தீவிரவாத சம்பவங்கள் அதிகரிப்பதை கண்டித்து வாசிரிஸ்தான் பழங்குடியின மாவட்டத்தில் உள்ள வானாவில் நேற்று முன்தினம் போராட்டம் நடத்தப்பட்டது. தங்கள் பகுதிகளில் அமைதியின்மை, தீவிரவாதம் மற்றும் கடத்தல் சம்பவங்கள் அதிகரித்து வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பழங்குடியின மக்கள் இந்த போராட்டத்தில் கலந்து கொண்டனர்.